பக்கம் எண் :

களிற்றியானை நிரை191

81. பாலை

[பிரிவுணர்த்திய தலைமகற்குத் தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது.]

நாளுலா எழுந்த கோள்வல் உளியம்
ஒங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்
புல்லளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
ஒருங்குமுயன் றெடுத்த நனைவாய் நெடூங்கோ
5. டிரும்பூது குருகின் இடந்திரை தேரும்
மண்பக வறந்த ஆங்கட் கண்பொரக்
கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
நெறியயல் மராஅம் ஏறிப் புலம்புகொள
எறிபருந் தயவும் என்றூழ் நீளிடை
10. வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் சிறந்த
செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்
ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கம்
மாவண் கடலன் விளங்கில் அன்னஎம்
மையெழில் உண்கண் கலுழ
15. ஐய சேறிரோ அகன்றுசெய் பொருட்கே.

-ஆலம்பேரி சாத்தனார்.

(சொ - ள்.) 15. ஐய-, அகன்றுசெய் பொரட்கு - எம்மைப் பிரிந்துசென்று தேடும் பொருட்கு;

10-1. சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின் - சிறந்த தலைமை வாய்ந்த நும் உள்ளம் தூண்டுதலின்;

11-4. கறுத்தோர் - வெகுண்டெழுந்த பகைவரது, ஒளிறு வேல் அழுவம் - ஒளிர்கின்ற வேலினையுடைய போர்க்களத்தை, களிறு படக் கடக்கம்-யானைகள் மடிய வெல்லும், மாவண் கடலன் விளங்கில் எனும் பதியை யொத்த, எம் எழில் மை உண்கண் கலுழ - எமது அழகிய மையுண்ட கண்ணினளாய தலைவி அழ;

1-6. நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்-விடியற் காலத்தே எபந்து உலாவிய தன் இரையைக் கொள்ளுதலில் வல்ல கரடி, ஒஙகசினை இருப்பைத் தீம் பழம் முனையின்-உயர்ந்த கிளைகளை யுடைய இருப்பை மரத்தின் இனிய பழத்தினை வெறுப்பின், பல்கிளைச் சிதலை-பல கிளைகளாய கறையான், நனைவாய் ஒருங்கு முயன்று எடுத்த-நனைந்த வாயால் ஒருங்குகூடி வருந்திக் கட்டிய, புல்அளைப் புற்றின்-