புல்லிய வளைகளையுடைய புள்றினது, நெடுங்கோடு-நெடிய உச்சியினை, இரும்பு ஊது குருகின் இடந்து - இருப்பு உலையில் ஊதும் துருத்தி யைப் போன்று (உயிர்த்துப்) பெயர்த்து, இரை தேரும்-இரையினை ஆய்ந்தெடுத்துண்ணும், மண்பக வறந்த ஆங்கண்-மண் பிளவுபட வறட்சியுற்ற பாலை நிலமாய அவ்விடத்து; 6-10. கண் பொரக் கதிர் தெற-வெய்யில் கண்களைப் பார்க்க வொண்ணாதவாறு பொர ஞாயிறு காய்தலின், நெறி அயல் மராஅம் - நெறியின் அயலதாகிய வெண்கடம்புகளின், கவிழ்ந்த உலறுதலை நோன்கினை ஏறி-(தழைகள் வாடிக்) கவிழ்ந்துள காய்ந்த உச்சியினையுடைய வலிய கிளைகளில் ஏறி, புலம்புகொள எறி பருந்து உயவும்-இரையினைப் பாய்ந்தெடுக்கும் பருந்து தனிமை கொள வருந்து, என்றூழ் நீள் இடை-வெப்பம் மிக்க நீண்ட இடங்களாய, வெம்முனை அருஞ்சுரம் நீந்தி - வெவ்விய முனைகளையுடைய அரிய சுரத்தினைக் தாண்டி; 15. சேறிரோ - செல்லுவீரோ. (முடிபு) ஐய! பொருட்க உள்ளம் துரத்தலின், உண் கண் கலுழ, அருஞ்சுரம் நீந்திச் சேறிரோ. உளியம் தீம்பழம் முனையின் நெடுங்கோடிடத்து இரை தேரும் ஆங்கண் பருந்த உயவும் நீளிடை அருஞ்சுரம் என்க. (வி - ரை.)1'அத்த விருபை யார்கழல் புதுப்பூத், துய்த்த வாய துணிகலம் பரக்க,....வன்கை யெண்கின் வயநிரை பரக்கும்’ எனக் கரடி இருப்பைப்பூ உண்டலும், 2'ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த, குரும்பி வல்சிப் பெருங்கை யேற்றை’ எனப் புற்றாம் பழஞ்சோறு உண்டலும் முன்னர் வந்துள்ளமை காண்க. கரடிட அகழ்கின்ற காலத்து உயிர்த்தலின், குருகின் இடந்து என்றார். முனை - எயினர் இருப்பு. அழுவம்-போர்க்களப் பரப்பு எம்ஐ எழில் எனப் பிரித்து வியக்கத்தக்க அழகு என்றுரைத்தலுமாம். உண்கண்: ஆகுபெயர்; தலைவியை உளப்படத்தி எம் கண் கலுழ என்றுரைத்தாளுமாம். இது செலவழுஙகுவித்தது.
1. 2. அகம்: 15; 8. |