பக்கம் எண் :

களிற்றியானை நிரை193

82. குறிஞ்சி

[தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது.]

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகர லாகக்
5.  கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத் தியலியா டும்மயில்
10. 1நனவுப்புகு விறலியில் தோன்றம் நாடன்
உருவ வல்வில் பற்றி அம்புதெரிந்து
செருச்செய் யானை சென்னெறி வினாஅய்
புலர்கரல் ஏனற் புழையுடை ஒருசிறை
மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர்
15.  பலர்தில் வாழி அவருள்
ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி
ஓரியா னாகுவ தெவன்கொல்
நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.

-கபிலர்.

(சொ - ள்.) 15. தோழி வாழி-;

1-15. ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கில் - அசையும் மூங்கிலில் துளைக்கப்பெற்ற விளங்கும் துளையிடத்தே, கோடை அவ்வளி குழல் இசையாக-அழகிய மேல் காற்றினா லெழும் ஒலி குழலின் இசையாகவும், பாடு இன் அருவிப் பனிநீர் இன்னிசை - ஒலி இனிய அருவியின் குளிர்ந்த நீரின் இனிய ஒசை, தோடு அமை முழவின் துதை குரலாக - தொகுதியாகிய முழவின் நெருங்கிய இசையாகவும், கணக்கலை இருக்கம் கடுங்கரல் தூம்பொடு - கூட்டமாய கலைமான்கள் தாழ ஒலிக்கும் கடிய குரல் பெருவங்கியத்தின் இசையாகவும் (அதனொடு), மலைப் பூஞ்சாரல் வண்டு யாழாக - மலைச்சாரலிடத்தே பூக்களிலுள்ள வண்டின் ஒலியாழின் இசையாகவும்ஆக, இன்பல் இமிழ் இசைகேட்டு-இங்ஙனம் இனிய பலவாய ஒலிக்கம் இசைகளைக் கேட்டு, கலி சிறந்து - ஆரவாரம் மிக்கு, மந்தி நல்லவை மருள்வன நோக்க - மந்திகளாய


(பாடம்) 1. விழவுக்கள விறலியில்.