பக்கம் எண் :

194அகநானூறு

நல்ல திரள் வியப்புற்றுக்காண, கழை வளர் அடுக்கத்து - மூங்கில் வளரும் பக்க மலையில், இயலி ஆடும் மயில் - உலாவி ஆடும் மயில்கள், நனவுப் புகும் விறலியில் தோன்றும் நாடன் - களத்திற் புகுந்தாடும் விறலிபோலத் தோன்றம் நாட்டையுடையவனாகிய, மலர் தார் மார்பன்- அகன்ற தாரினை யணிந்த மார்பையுடையவன், உருவ வல் வில் பற்றி - அழகிய வலிய வில்லினைக் கையிற் பற்றி, அம்பு தெரிந்து- சிறந்த அம்பினை ஆய்ந்து கொண்டு, செருச் செய் யானை செல் நெறி வினாஅப்-தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற நெறியினை வினவி, புலர் குரல் ஏனல் புழையுடைய ஒருசிறை - முதிர்ந்த கதிரினையுடைய தினைப் புனத்தின் வாயிலின் ஒரு பக்கததே, நின்றோன் கண்டோர் - நின்ற வனைக் கண்டோர், பலர் - பலராவர்;

15-18. அவருள் - அவர் தம்முள், ஆர் இருள் கங்குல் - அரிய இருள் செறிந்த இரவில், அணையொடு பொருந்தி - அணையின்கண் தங்கி, நீர்வார் கண்ணொடு - நீர் சொரியும் கண்ணினொடு, நெகிழ் தோளேன் - மெலிந்த தோளையுடையேனாக; ஒர் யான் ஆகுவது எவன் கொல் - யானொருத்தியுமே ஆயது என்னையோ?

(முடிபு) தோழி வாழி! நாடன், மார்பன் நின்றோற் கண்டோர் பலர்; அவருள் அணையொடு பொருந்தி நீர்வார் கண்ணொடு, நெகிழ் தோளேன் ஓர் யான் ஆகுவது எவன் கொல்?

(வி - ரை.) மூங்கிலில் வண்ட துளைத்த துளையின் வழியே மேல் காற்றுச் செல்லுதலால் எழும் ஒசை, குழலிசை போலும் என்னுங் கருத்து, ‘ஆடமைத் தும்பி குயின்ற, அகலா வந்துளை கோடை முகத்தலின், நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல், ஆய்க்குழற் பாணியினைதுவந் திசைக்கும்’ (225) எனப் பின்னர் வருதலுங் காண்க. இவ்வுருவகம், 1'பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக், கிருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழிற், குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர், மயிலா டரங்கின் மந்தி காண் பனகாண்’ என மணிமேகலையில் அமைந்திருத்தல் அறிந்து இன்புறத்தக்கது உருவ - என்றதனை உரிச்சொல் ஈறு திரிந்ததெனக் கொண்டு உட்குப் பொருந்திய என்றலுமாம். 2'உருவக் கதிரை மழவர் ஒட்டிய’ என்பதன் உரை காண்க செருச் செய் யானை - போர்செய்த அம்பு எய்யப்பெற்ற யானை. மலர் மார்பு என இயையும். மலர்ந்த தார் எனச் சினைக்கேற்ற அடையாக்கலுமாம். தில்: அசை.

‘ஆடமை குயின்ற...நாடன்’ என்றது இங்ஙனம் பிறர்க்கெல்லாம் இன்பஞ் செய்யும் நாடனைக் கண்டார் பலருள்ளம் நமக்கே துயராவான் என்னென்றவாறு. இச் செய்யுள் புதுமை பொருளாகத் தோன்றிய வியப்பு என்னம் மெய்ப்பாடு.


1. மணி 4: 1-6.

2. அகம்: 1.