பக்கம் எண் :

களிற்றியானை நிரை195

(மே - ள்.) 1'வரைவிடை வைத்த காலத்து வருந்தினும், வரையா நாளிடை வந்தோன் முட்டினும், உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும், தானே கூறுங் காலமு முளவே’ என்னும் சூத்திரத்து இச் செய்யுளை எடுத்துக்காட்டி, ‘அவனை ஆயத்தார் பலருங் கண்டாரென வந்தோன் முட்டியவாறும், அவருள் நெகிழ் தோளேன் யாயேயெனத் தானே கூறிவாறுங் காண்க’ என்றரைத்தனர், நச்.

2'புதுமை பெருமை’ என்னுஞ் சூத்திரத்து ‘மந்தி நல்லவை...தோன்றும் நாடன்’ என்றவழி பண்டு ஒருகாலும் கண்டறியாதபடி ஆடிற்று மயில் என்றமையின், பிற பொருட்கட் டோன்றிய புதுமை யாயிற்று எனவும், ‘மலர் தார் மாப்ன்...நெகிழ தோளேனே’ என்றது தன்கட்டோன்றிய புதுமை பற்றிய வியப்புப் பிறந்தது. என்னை? தன் கருத்து வெளிப்படாது தன் மெய்க்கட்டோன்றிய புதுமையைத் தலைவி வியந்தாள் போலத் தோழிக்க அறத்தொடு நின்றமையின் எனவும், 3'இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கண்டுயில்’ மறத்த லென்பது ‘இரவும் பகலுந் துஞ்சாமை’; அது ‘புலர்குர லேனல்....நெகிழ்தோ ளேனே’ என வரும் எனவும் உரைத்தார், பேரா.

83. பாலை

[தலைமகன் இடைச் சுரததுத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]

வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புதுவீச்
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
கறையடி மடப்பிடி கானத் தலறக்
களிற்றுக்கன் றொழித்த உவகையர் கலிசிறந்து
5.கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து
பெரும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவுநொடை நல்லில் புதவுமுதற் பிணிக்குங்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
10.வியன்றலை நன்னாட்டு வேங்கடங் கழியினும்
சேயர் என்னா தன்புமிகக் கடைஇ
எய்தவந் தனவால் தாமே நெய்தல்
கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்தெழில் மழைக்கணெம் காதலி குணனே.

-கல்லாடனார்.


1. தொல். களவு: 21.

2. தொல். மெய்ப்: 7.

3. தொல். மெய்ப்: 22.