பக்கம் எண் :

களிற்றியானை நிரை197

84. முல்லை

[தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது.]

மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித்
1தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர
5. இருநிலங் கவினிய ஏமுறு காலை
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவடைந் திருந்த அருமுனை இயவில்
10. சீறூ ரோளே 2ஒண்ணுதல் யாமே
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடந் காரெயில்
15. அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்
வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே.

-மதுரை எழுத்தாளன்.

(சொ - ள்.) 1.5. மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில் - மலைமீது வளைந்த அச்சந் தரும் அழகிய வில்லினையுடைய, பணை முழங்கு எழிலி - முரசமென முழங்கும் மேகம், பௌவம் வாங்கி-கடல் நீரை முகந்துகொண்டு, வலன் ஏர்பு வளைஇ - உலகினை வலனாக எழுந்து வளைத்து, தாழ் பெயல் பெருநீர் - இறங்கிப் பெய்யும் மிக்க மழையை, மாதிரம் புதைப்பப் பொழிதலின்-திசை யெல்லாம் மறையப் பொழிதலால், காண்வர இருநிலம் கவினிய ஏம்உறு காலை - காட்சி யுறப் பெரிய நிலம் அழகுபெற்ற இன்பம் எய்திய இக்காலத்தே;

10. ஒண்ணுதல் - ஒளி பொருந்திய நெற்றியினையுடைய நம் தலைவி;

6-10. அயிர்க்கண் படாஅர்த் துஞ்சு - நுண் மணலின்கண் ணுள்ள சிறு தூற்றினிடத்தே தூங்கும், நெருபபின் அன்ன சிறுகண் பன்றி - நெருப்பினை யொத்த சிறிய கண்ணினையுடைய பன்றியின்,


(பாடம்) 1. தாழ்பெயற் கெதிரி.

2. நன்னுதல்.