பக்கம் எண் :

198அகநானூறு

புறம் புதைய - முதுகு மறைய, நறுவீ முல்லை நாள் மலர் உதிரும் - நறிய புறம் புதைய - முதுகு மறைய, நறுவீ முல்லை நாள் மலர் உதிரும் - நறிய பூவினதாகிய முல்லையின் புதிய பூக்கள் உதிரும், புறவு அடைந்திருந்த அருமுனை இயவில் - காடு சார்ந்திருகும் அரிய முனைகளை யுடைய நெறியிலுள்ள, சீறூரோள் - சிறிய ஊரின்கண் உள்ளாள் ஆவன்;

10-7. யாமே - யாமோ, எரி புரை பன்மலர் பிறழ வாங்கி நெருப்புப் போன்ற பல மலர்களை மாறுபட வைத்து வலித்து, அரிஞர் யாத்த அலங்கதலைப் பெருஞ்சூடு - நெல்லரிஞர் கட்டிய அசையும் பக்கங்களுடைய பெரிய நெற்கட்டினகை் கொண்டு, கள்ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும் - கள்ளினை உண்ட களமர் களந்தோறும் கொடு போகும், தண்ணடை தழீஇய கொடி நுடங்கும் ஆர் எயில் - மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசையும் இவ்வரிய எயிலை, அருந்திறை கொடுப்ப வும் கொள்ளான் - பகைவர் வணங்கி அரிய திறையாகக் கொடுப்பவும் ஏற்றுக் கொள்ளானாகி, சினஞ் சிறந்து - சினம் மிக்கு, வினைவயின் பெயர்க்கும் தானை - மேன்மேலும் போரின்கட் செலுத்தும் சேனை யினையுடைய, புனைதார் வேந்தன் பாசறையேம் - மாலையை அணிந்த அரசனது பாசறையிடத்தே யுள்ளேம்.

(முடிபு) எழிலி பொழிதலின் இருநிலம் கவினிய ஏமுறு காலை, ஒண்ணுதல் சீறு ரோன்: யாமே, ஆரெயில் திறை கொடுப்பவும் கொள்ளான் வினைவயிற் பெயர்க்கும் தானைப் புனைதார் வேந்தன் பாசறையேம்.

(வி - ரை.) ஏம் - ஏமம்; பாதுகாவலுமாம். எரிபுரை மலர் - தாமரை, செங்கழுநீர். பிறா என்றது பூவோ டரிந்த நெல்லைக் கட்டுங்காலத்து அரியோடு மாற வைத்துக் கட்டப் பெறுதலால் அவை தம் மின் மாறுபடல். எயில் - அரண், ஊர். தூவிடக் கருதிய தலைவன் சீறூரோள் ஒண்ணுதல் எனத் தன் வருத்தந் தோன்றக் கூறினான் என்க. இதனைத் தூது கண்டு கூறிய தென்பர் நச்சினார்க்கினியர்.

(மே - ள்.) 1'ஏவன் மரபின்’ என்னுஞ் சூத்திரத்து, இச்செய்யுளை எடுத்துக்காட்டி, இது தூது கண்டு வருந்திக் வறியது எனவும், இதன் கண் தன்னூரும் அருமுனையியவிற் சீறூர் என்றலின், தான் குறுநில மன்னன் என்பது பெற்றாம் என்றும், 2'தானே சேறலும்’ என்னுஞ் சூத்திரத்து, ‘இது, குறுநில மன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது’ என்றும், 3'ஒன்றாத் தமரினும்’ என்னம் சூத்திரத்து இது, ‘ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்’ என்றதற்கு உதாரணமாகு மென்றும், 4'கூதிர் வேனில்’ என்னுஞ் சூத்திரத்து, ‘வினைவயிற்..... பாசறை யேமே’ எனத் தவைியை நினைவன வாகைக்க வழுவாம்; அகத்திற்கு வழுவன்று என்றும் கூறுவர், நச்.


1. தொல். அகத்: 24.

2. தொல். அகத்: 27.

3. தொல். அகத்: 41.

4. தொல். புறத்: 21.