85. பாலை [தலைமகன் பிரிய வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.] | நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும் உண்ணா உயக்கமோ டுயிர்செலச் சாஅய் இன்னம் ஆகவும் இங்குநத் துறந்தோர் அறவர் அல்லர் அவரெனப் பலபுலந்து | 5. | ஆழல் வாழி தோழி சாரல் ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி கன்றுபசி களைஇய பைங்கண் யானை முற்றா மூங்கில் முளைதரு பூட்டும் வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை | 10. | நன்னாட் பூத்த நாகிள வேங்கை நறுவீ யாடிய பொறிவரி மஞ்ஞை நகைப்பசுங் குருந்தின் நாறுசினை யிருந்து துணைப்பயிர்ந் தகவுந்1 துனைதரு தண்கார் வருதும் யாமெனத் தேற்றிய | 15. | பருவங் காணது பாயின்றால் மழையே. | | -காட்டூர் கிழார் மகனார் கண்ணனார். |
(சொ - ள்.) 1-5. தோழி வாழி-; நன்னுதல் பசப்பவும் - அழகிய நெற்றி பசந்திடவும், பெருந் தோள் நெகிழவும் - பெரிய தோள் மொலிந்திடவும், உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய் - உண்ணா மையா லாய வருத்தத்தால் உயிர் நீங்க மெலிந்து, இன்னம் ஆகவும் - நாம் இந்நிலையினமாகவும், இங்க நம் துறந்தோர்-இங்கு நம்மைவிட்டுப் பிரிந்தார் நம் தலைவர், அறவர் அல்லர் அவர் -எனவே அவர் அறத்தின ரல்லர், எனப் பல புலந்து ஆழல் - என்றிவ்வாறு பலவுங் கூறி வெறுத்துத் துயல் அழுந்தாதே; 5-15. சாரல் - மலைச் சாரற்கண்ணே, ஈன்று நாள் உலந்த மெல்நடை மடப்பிடி கன்று பசி களைஇய - ஈன்று அணிமை கழிந்த மெல்லிய நடை வாய்ந்த இளைய பிடியினதம் அதன் கன்றினதும் பசியைப் போக்கற்கு, பைங்கண் யானை - பசிய கண்ணினையுடைய களிறு, முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் - மூங்கிலின் முற்றா முளையினைக் கொணர்ந்து உண்பிக்கும், வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை-வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையனத வேங்கடமெனும் நீண்ட மலையில், நன்னாள் பூத்த நாக இளவேங்கை-நல்ல நாட்காலையிற்
(பாடம்) 1. துணைதரு தண்கார். |