பூத்த மிகஇளைய வேங்கை மரத்தின், நறுவீ ஆடிய பொறி வரிமஞ்ஞை-நறியபூக்களின் துகளை அளைந்த பொறிகளுடன் கூடிய வரிகளையுடைய மயில், நனைப் பசுங் குருந்தின் நாறு சினை யிருந்து-தேனையுடைய பசிய குருந்த மரத்தின் நறுமணம் வீசும் கிளையிலிருந்து, துணைப் பயிர்ந்து அகவும் துனைதரு தண்கார் - தன் துணையை அழைத்துக் கூப்பிடும் விரைந்து வரும் குளிர்ந்த கார்ப் பருவமே, யாம் வருதும் எனத் தேற்றிய பருவம் - நம் தலைவர் தாம் வருவோம் எனத் தெளிவித்த பருவமாகும், மழை பாயின்று-அதற்கு மழையும் பரவாநின்றது, அதுகாண் - அதனைக் காண்பாயாக. (முடிபு) தோழி, வாழி! நாம் இன்னம் ஆக, நம் தலைவர் நம்மைத் துறந்தார், அவர் அறவரல்லர், எனப் புலந்து அழல்; தண்கார், யாம் வருதும் எனத் தேற்றிய பருவம், மழை பாயின்று; அது காண். யானை முளை தருபு ஊட்டும் வேங்கட நெடுவரை வேங்கை நறுவீயாடிய மஞ்ஞை குருந்தின் சினையிருந்த துணைப் பயிர்ந்தகவும் கார் என்க. (வி - ரை.) நம் துறந்தோர் என்பது நத்துறந்தோர் என விகாரமாயிற்று. நாள் உலந்த-நாள் முடிந்த; ஈண்றணிமை கழிந்த என்றபடி. பிடி கன்று இவற்றின் பசியென விரித்துக் கொள்க. வேங்கை பூக்குங் காலம் மணநாள் ஆகலின், நன்னாட் பூத்த என்றாள் எனலுமாம். கார் விரைவில் வந்துவிடும் என்பாள் துனைதரு தண்கார் எனவும் மழை பாயின்று எனவும் கூறினாள். எனவே இது வேனிற் காலத்து இறுதி யாயிற்று. மஞ்ஞை துணைப் பயிர்ந்து அகவும் என்றத, கார் காலத்தில் பிரிந்திருத்தல் அருமையால் கூடுதற்கு அழைக்கும் என்றபடி. 86. மருதம் [வாயில் மறத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகைள்கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்.] | உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் | 5. | கனையிருள் அகன்ற கவின்பெறு காலை கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் |
|