பக்கம் எண் :

களிற்றியானை நிரை201

10. முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
15. நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
20. ஓரிற் கூடிய உடன்புணர் கங்கல்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த ஓர்புறந் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
25. நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென
இன்னகை இருக்கைப் பின்யான் வினவலின்
செஞ்சூட் டொண்குழை வண்காத தயல்வர
அகமலி உவகையள் ஆகி முகனிகுத்
தொய்யென இறைஞ்சி யோளே மாவின்
30. மடங்கெள் மதைஇய நோக்கின்
ஒடுங்கீர் ஓதி மாஅ யோளே.

-நல்லாவூர் கிழார்.

(சொ - ள்.) 1-4. உழுந்து தலைப்பெய்த கொழுங் களிமிதவை - உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலை யுடைய பொங்கலொடு, பெருஞ் சோற்று அமலை நிற்ப - பெரிய பந்தரில், தருமணல் ஞெமிரி - கொணர்ந்திட்ட மணலைப் பரப்பி, மனை விளக்கு உறுத்து - மனையின்கண் விளக்கினை ஏற்றி வைத்து, மாலை தொடரி - மாலைகளைத் தொங்கவிட்டு;

5-10. கோல் கால் நீங்கிய கொடுவெண் திங்கள் - தீய கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற வளைந்த வெள்ளிய திங்களை, கேடுஇல் விழுப்புகழ் நாள் தலை வந்தென - குற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி எனும் நாள் அடைந்ததாக, கனைஇருள் அகன்ற கவின்