பெறு காலை-அந்நாளிலே மிக்க இருள் நீங்கிய அழகு பொருந்திய விடியற்காலையில், உச்சிக்குடத்தர் புது அகல் மண்டையர்-உச்சியில் குடத்தினை யுடையரும் கையினிற் புதிய அகன்ற மண்டை எனும் கலத்தினையுடையரும் ஆகிய, பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் - மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர், முன்னவும் பின்னவும் முறை முறை தரத் தர - முன்னே தருவனவும் பின்னே தருவனவும் முறை முறையாத் தந்திட; 11-6. புதல்வன் பயந்த திதலை அவ் வயிற்று - மகனைப் பெற்ற தேமலுடைய அழகிய வயிற்றினையுடைய, வால் இழை மகளிர் நால்வர் கூடி - தூய அணிகளையுடைய மகளிர் நால்வர் கூடி நின்று, கற்பினின் வழாஅ நற்பல உதவி - கற்பினின்றும் வழுவாது நன்றாய ல பேற களையும் தந்து, பெற்றோன் பெட்கும் பிணைணை ஆகென-நின்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தையுடையை ஆக என்று குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள், பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க-மிக்க கரிய கூந்தலில் நெற்களுடன் விளங்க; 17. வதுவை நன்மணம் கழிந்த பின்றை - இங்ஙனம் நன்றாகிய வதுவைக் கலியாணம் முடிந்த பின்பு; 18-20. தமர் கல் என் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து - சற்றத்தார் கல்லென்ற ஒலியினராய் விரைந்து வந்து, பேர் இற்கிழத்தி ஆக எனத் தர - பெரிய னைக் கிழத்தி ஆவாய் என்று வறிக் கூட்ட, ஓர் இல் வடிய உடன்புணர் கங்குல் - ஓர் அறையில் உடன்வடிய புணர்ச்சிக்குரிய இரவில்; 21-6. கொடும்புறம் வளைஇ - முதுகினை வளைத்து, கோடிக் கலிங்கத்து-கோடிப் புடைவைக்குள், ஒடுங்கினள் கிடந்த புறம் தழீஇ-ஒடுங்கிக்கிடந்த இடத்தினைச் சார்ந்து, முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப - அணையும் விருபுடன் முகத்தினை மூடியிருந்த ஆடையினை நீக்க, அஞ்சினள் உயிர்த்தபொழுது, நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரையென - நின் உள்ளம் நினைந்ததனை மறையாது உரை என்று, பின் யான் வினவலின் - யான் பின்பு வினவுதலின், இன் நகை இருக்கை - இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையின்கண்; 27-31. மாவின் மடங் கொள் மதைஇய நோக்கின் - மானின் மடத்தினைக் கொண்டதும் செருக்கினை யுடையதுமான நோக்கினையும், ஒடுங்கு ஈர் ஓதி-ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலினையும் உடைய, மாஅயோள்-மாமை நிறத்தினை யுடையாள்; செஞ் சூட்டு ஒண் குழை வண்காது துயல்வர - சிவந்த மணிகள் பதித்த ஒள்ளிய குழை வளவிய காதின்கண் அசைய, அகம் மலி உவகையள் ஆகி - உள்ளம் நிறைந்த மகிழச்சியினள் ஆகி, முகன் இகுத்து- |