பக்கம் எண் :

களிற்றியானை நிரை203

முகத்தினைத் தாழ்த்து, ஒய்யென இறைஞ்சியோள் - விரைந்து தலை வணங்கினள்.

(முடிபு) வதுவை நன் மணம் கழிந்த பின்றை, தமர்தர ஒரிற் வடிய கங்கல், கோடிக் கலிங்கத்து ஒடுஙகினள் கிடந்த புறம் தழீஇ, முகம் புதைதிறப்ப, அஞ்சினள் உயிர்த்தகாலை, நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரையென யான் வினவலின், மாயோள் முகன் இகுத்து ஒய்யென இறைஞ்கியோள்.

நாள் தவைந்தென, அமலை நிற்ப, பந்தர் விளக்குறுத்து, மாலை தொடரி, முது செம் பெண்டிர் தரத் தர, மகளிர் நால்வர் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கம் பிணையை ஆகென, நீரொடு சொரிந்த அலரி கதுப்பின் நெல்லொடு தயங்க, வதுவை நன் மணம் கழிந்த பின்றை என்க.

(வி - ரை.) மிதவை - பொங்கல் ; கும்மாயமுமாம். உண்பார் இடையறாமைபற்றி அமலை நிற்ப என்றான். ஞெமிரி - பரப்பி எனப் பிறவினைப் பொருட்டு. விளக்குறுத்து - தூய்மை செய்து என்றுமாம். கனையிரு ளகன்றகாலை யென்றமையால், முற்பக்கம் (பூர்வ பக்கம்) என்பது பெற்றாம். கோள் என்றது இண்டுத் தீய கோள்களை. உரோ கணி என்பதனை வருவித்து, விழுப்புகழ் நாளாவது உரோகணி திங்களை அடைந்த நாள் என்னலுமாம். உரோகணியும் திங்களை அடைந்த நாள் என்னலுமாம். உோகணியும் திங்களும் வடிய நாள் கலியாணத்திற்குச் சிறந்ததென்பது, ‘திங்கட் சகடம் வேண்டிய துகடீா கூட்டத்து....வதுவை மண்ணிய மகளிர்’1 எனப் பின்னர் இந்நூலுள்ளும், 2'வானூர் மதியம் சகடணைய வானத்துச், சாலியொர மீன் தகையாளைக் கோவலன், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது’ எனச் சிலப்பதிகாரத்துள்ளும் வருதலான் அறியப்படும். கலியாணம் எல்லாரும் புகுதற்க உரியதாகலின், ‘பொது’ எனப்பட்டத. பிணை - விருப்பம்; 3'பிணையும் பேணும் பெட்பின் பொருள’ என்பவாகலின். நெல்லொடு தயங்க என்றமையால், நெல்லும் சொரிந்தமை பெற்றாம். வதுவை மணமாவது - குளிப்பாட்டல். கேகடிக்கலிங்கம்-புதுப் புடைவை. ஒர்புறந் தழீஇ: ஒர், அசை. யாழ: அசை. தைமைகன் தோழிக்கு வாயின் மறுத்தவழிக் கூறியதாயின் தலைவி எக்காலத்தும் என்பால் இன்னதோர்அன்புடையள்; அவள் கருத்தறியாது கூறுகின்றனை என்றான் என்க.

(மே - ள்.) 4'கற்பெனப் படுவது’ என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளைக் காட்டி, ‘இதனுள் வதுகை்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்த வாறும், தமர் கொடுத்தவாறுங் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானும் தமர் அறிய மணவறைச் சேறலானும் களவாற் சுருங்கி நின்ற நாண் சிறந்தமையைப் பின்னர்த் தலைமகன் வினவ, அவள் மறுமொழி கொடாது நின்றமையைத் தலைவன் தோழிக்குக் வறியவாறு காண்க. இதனானே இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று என்றும்,


1. அகம்: 136.

2. சிலப். மங்கல: 50-53.

3. தொல். உரி: 40.

4. தொல். கற்பு: 1.