பக்கம் எண் :

204அகநானூறு

கரணத்தின் அமைந்து முடிந்த காலை’1 என்னுஞ் சூத்திரத்து ‘முகனிகுத் தொய்யென விறைஞ்சி யோளே’ என்பது கரணததின் அமைந்து முடிந்தது என்றும் கூறினர், நச்.

2'புகுமுகம் புரிதல்’ என்னுஞ் சூத்திரத்து, ‘அகமலி யுவகையளாகி முகனிகுத், தொய்யென விறைஞ்சி யோளே’ என்றது சிதைவு பிறர்க் கின்மை என்னம்மெய்ப்பாட்டிற்கு உதாரணமாகக் காட்டி, இது தலைமகன் அறிய மெப்பட்டதென்பது என்றும், 3'மறைவெளிப்படுதல் தமரிற் பெறுதல்’ என்னுஞ் சூத்திரத்து, ‘தமர்தர, ஒரிற்கூடி யுடன் புணர் கங்குல்’ என்பது. தமரிற் பெறுதல் என்றும் உரைத்தனர், பேரா.

87. பாலை

[4வினைமுற்றி மீளுந் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]

தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
கன்றுவாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை
நல்வர் சீறூர் எல்லித் தங்கிக்
5.குடுமி நெற்றி நெடுமரச் சேவல்
தலைக்குரல் விடியல் போகி முனாஅது
கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங்கட் பாணி
அருஞ்சுரம் செல்வோர் நெஞ்சந் துண்ணெனக்
10.குன்றுசேர் கவலை இசைக்கும் அத்தம்
நனிநீ டுழந்தனை மன்னே அதனால்
உவவினி வாழ நெஞ்சே மையற
வைகுசுடர் விளங்கும் வான்தோய் வியனகர்ச்
சுணங்கணி வனமுலை நலம்பா ராட்டித்
15.தாழிருங் கூந்தனங் காதலி
நீளமை வனப்பின் தோளுமா ரணைந்தே.

-மதுரைப் பேராலவாயார்.


1. தொல். கற்பு: 5.

2. தொல். மெய்ப்: 13.

3. தொல். செய்யுள்: 187.

(பாடம்) 4. இடைச்சுரத்து மீளலுறும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.