பக்கம் எண் :

களிற்றியானை நிரை27

 பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்பும் அவர்நாட்
டெண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது
மின்னுவிடச் சிறிய ஒதுங்கிய மென்மெலத்
15.துளிதலைத் தலைஇய 1மணியே ரைம்பால்
சிறுபுறம் புதைய வாாக் குரல்பிழியூஉ
நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம்
அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே.
 

- பெருங்குன்றூர் கிழார்.

(சொ - ள்.) 5-12. இகுளை-தோழியே!, பெரிய கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை - பெரிய ஆண் பன்றியினைக் கொன்ற பிளந்த வாயினையுடைய புலியேறு, பலா அமல் அடுக்கம் - பலாமரங்கள் செறிந்த பக்கமலைகளில், புலவ ஈர்க்கும் - புலால் நாற அதனை இழுத்துச் செல்லும் இடமாகிய, கழை நரல் சிலம்பின் ஆங்கண் - மூங்கில்கள் ஒலிக்கும் மலையாய அவ்விடத்து, வழையொடுவாழை ஓங்கிய தாழகண் அசும்பில் - சுரபுன்னையோடு வாழை ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய நீர் அறாக் குழியில், படுகடுங் களிற்றின் வருத்தம் சொலிய - அகப்பட்ட கடிய களிற்றின் வருத்தத்தினை நீக்கற்கு, பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் - அதன் பெண் யானை அக் களிறு ஏறுதற்குப் படியாகப் பெரிய மரத்தினை முறித்திட்ட ஓசை, விண்தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு - வான் அளாவிய மலைமுழையின்கண் சென்றொலிக்கும் நம் தலைவர் நாட்டில்,

13-14. என் அரும் பிறங்கள் மான் அதர் மயங்காது மின்னுவிடச் சிறிய மென்மெல ஒதுங்கி - எண்ணற்கரிய குன்றுகளின் பக்கமாகச் செல்லும் மான்களின் நெறிகளில் மயங்கித் திரியாது மின்னல் வழிகாட்டச் சிறுகச் சிறுக மெத்தென நடந்து,

1-4. ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குறும்பி வல்சி பெருங் கைஏற்றை - ஈயல்களை யு டைய புற்றின் குளிர்ந்த மேற்புறத்தே தங்கிய புற்றாஞ்சோறாகிய இரையினையுடைய பெரியகையினையுடைய ஆண்கரடியின், தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்-தொங்கும் தோல் உறைக்குள் பொருந்தியிக்கும் கூரிய நகம் பற்றிக் கொள்வதால், பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் - பாம்பு தனது வலிமை யற்றொழியும் பாதிநாளிரவும் (செல்லுதல்),

15-18. துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் - மழைத் துனியைத் தன்னிடத்தே கொண்ட நீலமணிபோன்ற அழகிய கூந்தலை,


(பாடம்) 1. மழையே ரைம்பால்.