பக்கம் எண் :

28அகநானூறு

சிறுபுறம் புதைய வாரி குரல் பிழயூஉ - பிடரிமறையப பின்ேகோதி அம் மயிர்த்தொகுதியைப் பிழிந்து விட்டு, நெறி கெட விலங்கிய இச் சுரம் நீயிர் அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறின் - வழிகள்செல்ல முடியாதபடி பின்னிக்கிடக்கும் இச்சுரத்தின் நெறியினை நீவிர் முன்பு அறிதலும் செய்வீரோ என்று பாவுற்று வினவுவாரைப் பெறின்,

5. அரிய அல்ல மன் - நமக்கு அரியன அல்லவாம்; (அந்தோ அது பெற்றிலோமே!)

(முடிபு) இகுளை! அவர் நாட்டு மென்மெல ஒதுங்கிப் பானாட்கங்குலும் (செல்லல்), வினவுவார்ப் பெறின் அரிய அல்லமன்.

ஏற்றை ஈர்க்கும் ஆங்கண் அசும்பில் படுகளிறு என்க.

(வி - ரை.) ‘ஏற்றை’ என்பது, “ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கெல்லாம். ஏற்றைக் கிளவி யுரித்தென மொழிப”1 என்பதனால், கரடி புலி முதலியவற்றின் ஆணினைக் குறிப்பதொரு மரபுப் பெயராகும். துதி - உறை. புலர என்றே பாடங்கொண்டு புலால் நாறஎனலுமாம். அறிதலு மறிதிரோ - இங்ஙனம் வினை யிரட்டிக்குங்கால் பின்னது ‘செய்தல்’ என்னும் பொதுவினையாகக் கொள்ளப்படும்; அறிதலும் அறிதியோ பாக2 என்பது காண்க. பிறங்கல் பிறங்குகல் என்பதன் விகாரமாம். மின்னுவிட - மின் வழிவிட. ஒதுங்கி - ஒதுங்க எனத் திரித்தலுமாம். மணியேர் ஐம்பால்: ஏர், உவம உருபுமாம்.

(உ - றை.) ‘ஈயற்புற்றத்து...மதனழியும்’ என்பதற்கு “ஏற்றையானது பாம்பை வருத்தவேண்டும் என்னும் கருத்தில்லையாயினும், அது தன் காரியம் செய்யவே வள்ளுகிர் படுதலாகிய அவ்வளவிற்குப் பாம்பு வலியழிந்தாற்போல, அவர் நம்மை வருத்தவேண்டும் என்னும் கருத்தில்லையாயிருக்கவே, தமது காரியமாகிய களவின்பத்திலே ஒழுகவே, ஆறன்னாமை ஊறின்னாமை முதலாகிய இவ்வளவிற்கே நாம் வருந்தும்படியாய் விட்டது” என்றும் ‘பெரிய கேழலட்ட...புலர வீர்க்கும்’ என்பதற்கு, “புலியானது தான் நுகர்தற் பொருட்டுக் கேழலை யட்டுப் பழ நாற்றத்தையுடைய பலாவம லடுக்கம் புலர ஈர்த்தாற்போல, அவரு இன்பந் துய்த்தற்பொருட்டு வந்து நம்மைக் கூடி, அக்கூட்டத்தாலே புகழ்ச்சியை யுடையத்தாகிய நம் குடியை இகழச்சி யுடையத்தாம்படி பண்ணினார்’ என்றும், ‘வதடிதுயொடு...விடரகத்தியம் பும்’ என்பதற்கு “வாழை நுகர வந்த யானை அதன் அயலாகிய அசும் பின் குழியிலே விழுந்ததாகப் பின்பு அக் குழியினின்றும் ஏறமாட்டாது வாழையாகிய உணவையும் இழந்துழிப், பிடிஅஃது ஏறுதற்குப் படியாக மரம் முறிக்கின்ற ஓசை விண்டோய் விடரகத்து இயம் பினாற்போல, அவரும் நமது நலம் நுகர வந்து களவொழுக்கமாகிய குழியிலே விழுந்து, இக்கள வொழுக்கமாகிய இதனை விட்டு வரையவு மாட்டாது,


1. தொல். மரபு ; 49.

2. நற்: 106: