நமது காவ லருமையால் இக்களவொழுக்கினை நுகரவுமாட்டாது துயரப்படுகின்றுி, அறத்தொடு நிலை முதலாகிய இவற்றால் மகளிராகிய நாமே வரையமுயலும் வழி, அம்முயற்சியானே ஊரெல்லாம் அறியும் படி பண்ணினார்” என்றும் கூறுவர், குறிப்புரைகாரர். (மே - ள்.) ‘அறக்கழிவுடையன’1 என்னும் சூத்திரத்து, இச் செய்யுளுள் ‘பாம்பு மதன்...இகுளை’ என்ற பகுதியைக் காட்டி, இதனுள், தலைவி செல்வாமென்றது, சிறைப்புறமாக வரைவு கடாயது பொருட்பயன் தருதலின், அறக்கழிவுடையதேனும் அமைந்தது என்றனர். நச். ‘மட்டும் எச்சமும்’2 என்னுஞ் சூத்திரத்து உரையில், இச் செய்யுளுள் முதலும் கருவும் முறை பிறழ வாராமையின், இதனைத் துறைவகையின்றி வந்தது என்பர், பேரா. 9. பாலை [வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.] | | கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்3 வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச் செப்படர் அன்ன செங்குழை அகந்தோ | | 5. | றிழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் உழுதுகாண் துளைய வாகி ஆர்கழல் பாலி வானிற் காலொடு பாறித் துப்பின் அன்ன செங்கோட் டியவின் நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும் | | 10. | அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்க் கொடுநுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடிமாண் உலக்கைத் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங் குன்றுபின் ஒழியப் போகி உரந்துரந்து | | 15. | ஞாயிறு படினும் ஊர்சேய்த் தொனாது துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன்மாண் |
1. தொல். பொருளியல் : 24. 2. தொல். செய்:211. (பாடம்) 3. குறும்பெகின். |