உரம் துரந்து - விரைந்து செல்லும் குதிரைகளை வலியாற் செலுத்தி, துக்கும் - மேலும் மேலு முடுக்கின்ற, துஞ்சாக் செலவின்-மடிதல் இல்லாத போக்கினையுடைய, எம்மினும் - எம்மைக் காட்டினும். 24-26. நாணொடு மிடைந்த கற்பின் - நாணொடு செறிந்த கற்பினையும், வாள் நுதல் - ஒள்ளிய நெற்றியினையும், அம் தீங் கிளவி - அழகிய இனிய சொல்லினையு முடைிடய, குறு மகள் - இளையோளது, மெல் தோள் பெற நசைஇ சென்ற - மெல்லிய தோளை அடைதற்கு விரும்பிச்சென்ற, என் நெஞசு - என் நெஞ்சம். 17. விரைந்து வல் எய்தி - மிக விரைந்து சென்று. 17-23. பல் மாண் ஓஙகிய நல்இல் - பல கட்டுக்களால் மாண் புற உயர்ந்த நல்ல இல்லில், ஒரு சிறை நிலைஇ - ஓரிடத்தே நின்று, பாங்கர் பல்லி படுதொறும் பரவி - நற்பக்கத்தே பல்லி ஒலிக்குந் தோறும் அதனைப் போற்றி, கன்று புகு மாலை நின்றோள் எய்தி - ஆன்கன்றுகள் இல்லிற்கு வந்துறும் மாலைக் காலத்தே நின்றவளை அடைந்து, கை கவியாச் சென்று குறுகி கண் புதையா-கையைக் கவித்துச்5 சென்று குறுகிக் கண்ணைப் புதைத்து, பிடிக்கை அன்ன பின்னகந் தீண்டடி.பெண் யானையின் கையை ஒத்த பின்னின கூந்தலைத் தீண்டி, தொடிக் கை தைவர தோய்ந்தன்று கொல் - அவளது தொடியணிந்த கை பொருந்தத் தழுவியது கொல்லோ! (முடிபு) சிறூர் உரற் பாணி இரட்டும் குன்று ஒழியப் போகித் துஞ்சாச் செலவின் எம்மினும் எம் நெஞ்சு விரைந்து சென்று மாலை நின்றோள் எய்திக் குறுகித் தோய்ந்தன்று கொல். (வி - ரை.) புழுகின் அப்பு எனக் கூட்டி, புழுகாகய அப்பு என்க. புழுகு- அம்பின் தலையிற் செறிக்கும் குப்பி; இது மல்லிகை மொட்டு எனவும படும். துய்வாய் - துய்யைத் தன்னிடத்தேயுடைய பூ; துய்-பஞ்சு. இழுதி னன்ன பூ எனவும் தீம் பூ எனவும் இயையும். ஆலி வானின் என்பதனை வானின் ஆலி என மாறுக. ஆலி - நீர்க்கட்டி; ஆலம் - நீர். காலொடு - காலால். துப்பின் அன்ன: சாரியை நிற்க உருபு தொக்கது. பரித்தல் - ஈண்டுப் பரத்தல். பாணி - உலக்கையாற் குற்றும்பொழுது பாடும் வள்ளைப்பாட்டுமாம். இரட்டுதல் - மாறியொலித்தல். வல் விரைந்து என மாறுக. பல்லி சொல்லுந்தொறும் பரவுதல் உலக வழக்கு. கன்று புகுதல் மாலைக்கு அடை. தன் வருகையைக் காண விருப்புற்றுத் தலைவி இங்ஙனம் நிற்பள் எனத் தலைவன், பாவிக்கின்றான். எம்மினும் நெஞ்சு வல்விரைந்தெய்தி என்றது, தலைவன் தலைவியைக் காண்டற்கு விரையும் விதுப்புத் தோன்ற நின்றது. நெஞ்சு எய்திக் கை கவியாச் சென்று குறுகித் தீண்டித் தோய்ந்தன்று என்பது, ‘நோயும் இன்பமும்’1 என்னும் சூத்திரத்து
1. தொல், பொருளியல்: 2 |