பக்கம் எண் :

32அகநானூறு

உறுப்புடையதுபோல்...நெஞ்சொடு புணர்த்தும்’ என்பதனால் அமைந்த ழுவதைதி யாகும்.

(மே - ள்.) ‘நோயு மின்பமும்’1 என்னுஞ் சூத்திர வுரையில் ‘கை கவியாச் சென்று....என்நெஞ்சு’ ‘இஃது உறுப்புடையது போல் உவந்துரைத்து’ என்று நச்சினார்க்கினியரம், ‘மரபே தானும்2 என்னுஞ் சூத்திர உரையில் இச் செய்யுளை எடுத்துக் காட்டி, ‘எனறவழி, குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்ற பொருள் தத்தம் மரபிற்றாய்ப் பலவும் வந்தன கண்டுகொள்’ என்று பேராசிரியரு கூறினர்.

10. நெய்தல்

[இரவுக்குறிவந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது.]

 வான்கடற் பரப்பில் தூவற் கெதிரிய
மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த
முடிவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப்
புள்ளிறை கூறும் மெல்ல புலம்ப
5. நெய்தல் உண்கண் பைதல கலுழப்
பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்
அரிதுதுற் றனை
3 யாற் பெரும உரிதினிற்
கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு
குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
10. பழந்திமில் கொன்ற4 புதுவலைப் பரதவர்
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே.
 

-அம்மூவனார்.

(சொ - ள்.) 1-4. வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய-பெரிய கடற்பரப்பில் எழும் திரைத் திவலைகளை ஏற்றுக் கொண்ட, மீன் கண்டன்ன - விண்மீனைக் கண்டாலொத்த, மெல் அருபு ஊழ்த்த - மெல்லிய அரும்புகள் மலர்ந்த, முடிவுமுதிர் புன்னை - முடம் பட்ட முதிர்ந்த புன்னைமரத்தின், தடவுநிலை மாசினை - பெரிய நிலையை


1. தொல். பொருளி: 2.

2. தொல். செய் : 80.

(பாடம்) 3. அரிதுற்றனை.

4. பழந்திமில் சென்ற.