பக்கம் எண் :

களிற்றியானை நிரை33

யுடைய கரிய சினையில், புள் இறைகூரும் மெல் அம் புலம்ப -புட்கள் மிகத் தங்கியிருக்கும் மென்னிலமாகிய கடற்கரைக்குத் தலைவனே!,

7. பெரும - பெருமானே!,

5-7. நெய்தல் உண்கண் பைதல கலுழ - நெய்தற் பூவை ஒத்த மையுண்ட இவள் கண்கள் வருந்தினவாய் அழ, பிரிதல் எண்ணினையாயின் - இவளைப் பிரிந்து செல்லுதலை நினைத்தாயாயின், நன்றும் அரிது துற்றனை - பெரிதும் அரியதனை மேற்கொள்வாயாயினை,

7-13. கொண்டலொடு குரூஉ திரைப் புணரி உடைதரும் எக்கர் - கீழ்காற்றால் விளக்கம் பொருந்திய கடலின் அலைகள் உடைக்கும் மணல் மேட்டிற் (கிடக்கும்), பழந்திமில் கொன்ற புது வலைப் பரதவர் - பழைய படகின்

சிதைவு போக்கிப் புதுக்கிய புதிய வலையினையுடைய பரதவர்கள், மோட்டு மணல் அடைகரை போட்டுமீன் கொண்டி - உயர்ந்த மணலையுடைய அடைகரையில் வந்து கிடக்கும் சுறாமீனின் கொள்ளையினை, மணம் கமழ பாக்கத்துப் பகுக்கும் - மணம் நாறுகின்ற பாக்கத்தின்கண் பலர்க்கம் பகுத்துக் கொடுக்கும், வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலன் - வளம் மிக்க தொண்டி என்னும் பட்டினத்தை யொத்த இவளது அழகு, உரிதினில் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும் - இவட்கே உரித்தாக நின்னூர்க்கு வரைந்து கொண்டு போதல் வேண்டும்.

(முடிபு) புலம்ப ! பெரும ! பிரிதல் எண்ணினையாயின் அரிது துற்றனை; தொண்டி அன்ன இவள் நலன், உரிதினில் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும்.

(வி - ரை.) எதிரிய ஊழ்த்த புன்னை என்க. தூவற்கு - தூவலை: வேற்றுமை மயக்கம். மாச்சினை: மா - கரிய எனலுமாம். பைதல்: வினையெச்சமுற்று கொண்டி - கொள்ளப்பட்டவை. பாக்கம் - பரதவர் சேரி. தொண்டி என்பதொரு பதி சோழநாட்டுக் கடற்கரைக்கண்ணிருப்பினும், இவ்வாசிரியர் பிற இடங்களில் சேரனுடைய தொண்டி, மாந்தை என்பனவற்றைப் பாடியிருத்தலின், இங்குக் குறித்த தொண்டியும் சேரர் கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியே யாதல் வேண்டும். 1'தோளும் கூந்தலும் பல பாராட்டி, வாழ்த லொல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் தொண்டி யன்ன, எற்கண்டு நயந்துநீ நல்காக் காலே’ என்பது காண்க. நலம் இவட்கு உரித்தாக வரைந்துகொண்டு போகவேண்டும் என்றது; அன்றாயின் இவள் இறந்துபடுவள் என்பது தோன்றக் கூறியபடி.

(உ-றை.) ‘பழந்திமில்...கொண்டி’ என்பதற்குப் “பரதவர் தாம் அழிவு கோத்த திமிலானும் பண்ணின வலையானும் தமது தொழி


1. ஐங் : 178