பக்கம் எண் :

34அகநானூறு

லாகிய வேட்டைமேற் செல்லாது தேடாமல் வந்த இழிந்த சுறாமீனை அகப்படுத், அதனை அழித்துக் கூறுவைத்து எல்லாரையும் அழைத்தாற்போல, நீயிரும் நுமக்கு உறுதியாக ஆக்கிக்கொள்ளப்பட்ட நன்மை களான் நுமக்கு ஒழுக்கமாகிய நல்வழியின் ஒழுகாது, கண்டோ ரிகழ்ந்த களவொழுக்கிலே ஒழுகி, இக் களவினைப் பரப்பிப் பலரும் அலர் கூறும்படி பண்ணாநின்றீர்” என்பர், குறிப்புரைகாரர்.

11. பாலை

[தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.]

 வானம் ஊர்ந்த வயங்கொளரி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அம்காட்
டிலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகு பெடுத்த
5.அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றிக்
கயந்துகள் ஆகிய பயந்தபு கானம்
எம்மொடு கழிந்தன ராயின் கம்மென
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கான்யாற்றுப்
படுசினை தாழந்த பயிலிணர் எக்கர்
10.மெய்புகு வன்ன கைகவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே நயவர
நீர்வார் நிகர்மலர் கடுப்ப ஓமறந்
தறுகுள நிறைக்குந போல அல்கலும்
அழுதன் மேவல வாகிப்
15.பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே.
 

-ஒளவையார்.

(சொ - ள்.) 1-7. வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்-வானில் ஊர்ந்தேகும் விளங்கம் ஒளியினதாகிய ஞாயிற்று மண்டிலம், நெருப்பெனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு - தீ யெனச் சினந்தெரித்த வெப்பம் விளங்கம் காட்டகத்தே, இலைஇல மலர்ந்த முகை இல் இலவம் - இலையிலவாய் மலர்ந்துள அருபில்லாத இலவம் பூக்கள், கலிகொள் அயம் மலிபு தொகுபு எடுத்த - ஆரவாரத்தைக் கொண்ட