பக்கம் எண் :

10

முகத்தானறிந்து அவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான் - எ - று.

நுதலையும் திறலையும் கடாத்தையும் மருங்கையும் பெருங்கையையும் உடைய யானைப்பிடர்த்தலையிருந்து எயிறுபடையாக எயிற்கதவிடாக் கூற்றத்து அருந்தொழில் சாயாப்பெரும்பெயர்வழுதியென மாறிக் கூட்டுக: காலாலடுதல் (பி-ம். காலிலிடுதல்) கையாலூக்குதலன்றி எயிறு படையாக எயிற்கதவிடக்கை விடாத பெருங்கையானையென இயைத் துரைப்பினுமமையும்; எயிற்கதவிடாஅக் கயிறுபிணிக்கொண்டவென இயைத்துரைப்பாருமுளர்.

ஊரில்ல உயவரிய நீரில்ல நீளிடையவாகிய உன்னமரத்த கவலையெனவும், பருந்திருந்துயவும் துன்னருங்கவலையெனவும் இயையும்.

மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர் வருவர்; அஃது அவர் இன்மை தீர்த்தல்வன்மையான்; அதனால், நின்சொற் பெயராதொழியல் வேண்டுமெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

வாழ்த்தியலாதல் விளங்க, வேண்டுமென ஒரு சொல் தந்துரைக்கப்பட்டது.

(கு - ரை.) 1. தொல், செய். சூ. 14, 54, 94, பேர்., ந. ; தொல். செய். சூ. 92, ந. மேற்.

3. ‘‘ஏம முரச மிழுமெனச் சிலைப்ப” (பெருங். 2, 5 : 18)

1 - 5. கலித். 99 : 8 - 9.

6. பெண்பாலாரை ஆண்பாலாரோடு சேர்த்து வாழ்த்துதல் மரபாதலின் இங்ஙனங் கூறினார்; ‘‘ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ”, ‘‘ஆன்றோள் கணவ”, ‘‘பாவை யன்ன நல்லோள் கணவன்”, ‘‘புரையோள் கணவ” (பதிற். 14, 55, 61, 70) ; ‘‘மங்கையர் கணவ” (முருகு. 264) ; ‘‘மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவன்” (மலைபடு, 58) ; ‘‘மக்களுட் பெண்பாலைப் பாடுதல் சிறப்பன்மையின், ‘செயிர்தீர்........கணவ’ என்றாற்போலச் சிறுபான்மை ஆண்மக்களோடு படுத்துப்பாடுப” (தொல். புறத்திணை. சூ. 26. ந.)

8. ‘‘துன்னருங் கடாஅம் போல” (புறநா. 94 : 4) கடாம் மணமுள்ளது; ‘‘மிஞிறார்க்குங் கமழ்கடாத்து”, ‘‘வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்து” (புறநா. 22 : 6, 93 : 12; கலித், 21 : 2) ; ‘‘கடுஞ்சினத்த கமழ் கடாஅத்து” (மதுரைக். 44) ; தக்க. 3, வி - கு.; கம்ப. நகரப். 58.

9. புறநா. 4 : 10 - 11. இடாஅ - குத்தி; புறநா. 303 : 9; கலித். 24 : 10.

9 - 11. கலித். 135 : 2 - 4.

7 - 11. ‘‘பொன்னோடை......யானை என அடுக்கி வருவனவும் ஒட்டி ஒரு சொல்லாகாமையுமுணர்க (தொல். எச்ச. சூ. 16, ந.)

12. ‘‘மருந்தில் கணிச்சி” (புறநா. 42 : 22) ; நின்ற கருமத்ததல்லாத வற்று” (அறநெறிச். 111) ; ‘‘மாற்றருங் கூற்றஞ் சாற்றிய