பக்கம் எண் :

11

பெருமையும்” (தொல். புறத்திணை. சூ. 24) ; ‘‘மாற்றே னெனவந்த காலனை” (திருச்சிற். 150) ; ‘‘மாற்றருங் கூற்றம்” (மணி. 25 : 49)

7 - 12. ‘எயிறுபடையாக.......சாயா என மாட்டாய் ஒட்டி நின்றது, ‘கயிறு பிணிக்கொண்ட’ என்பதனோடும் ஒட்டினாற் போலநின்று ஒற்றடுத்தது, இன்னோசை பெறுதற்கு” (தொல். புணர். சூ. 9, ந) ; ‘‘பொன்னோடை.......சாயாவென்றாற்போல வருவனவெல்லாம் அணுகி வந்த மாட்டென்னுமுறுப்பு” (தொல். எச்ச. சூ. 13, ந.)

10 - 13. ‘‘மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா” (இன்னா. 14)

14. ‘‘நிலம்புடை பெயர்வ தாயினும்” (புறநா. 34 : 5) ; ‘‘நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே” (பதிற். 63 : 6 - 7) ; ‘‘காதலர் நிலம்புடை பெயர்வ தாயினுங் கூறிய, சொற்புடை பெயர்தலோ விலரே” (நற். 289) ; ‘‘இம்மூ வுலகி னிருள் கடியு மாய்கதிர்போல், அம்மூன்று முற்ற வறிதலாற் - றம்மின், உறழா மயங்கி யுறழினு மென்றும், பிறழா பெரியோர்வாய்ச் சொல்” (பு - வெ. 167)

16. இவ்வடி ஒருபொருட்பன்மொழிக்கு மேற்கோள்’ நன். மயிலை. சூ. 397.

19. பார்வல் - பார்த்தல்; ‘‘பார்வற் பாசறை” (பதிற். 84 - 15) ; ‘‘பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறை” (மதுரைக். 231)

20. ‘‘சிலைவிற்கானவன் செந்தொடை வெரீஇ” (குறுந். 285 : 2) ; ‘‘வாங்கு தொடை பிழையா வன்க ணாடவர்” (அகநா. 175 : 2)

19 - 20. ‘அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்” (கலித். 4 : 3)

21. ‘‘வெண்ணுனை யம்பின் விசையிட வீழ்ந்தோர், எண்ணுவரம் பறியா வுவலிடு பதுக்கை”, ‘‘வில்லிட வீழ்ந்தோர் பதுக்கை”, ‘‘வடிநவிலம்பி னேவ லாடவர், ஆளழித் துயர்த்த வஞ்சுவரு பதுக்கை”, ‘‘கொடுவிற்
கானவர் கணையிடத் தொலைந்தோர், படுகளத் துயர்த்த மயிர்த்தலைப் பதுக்கை” (அகநா. 109, 157, 215, 231)

23. உன்னம் - போர் செய்தற்குச் செல்வோர் நிமித்தம் பார்த்தற்குரிய ஒருவகை மரம்; புன்கா லுன்னஞ் சாய” (பதிற். 40 : 17) என்பதும், ‘தன்னொடு பொரக்கருதுவார் நிமித்தம் பார்த்தவழி அவர்க்கு வென்றியின்மையிற் கரிந்து காட்ட’ என்னும் அதன் உரையும், ‘‘புன்காலுன்னத்துப் பகைவன்” (பதிற். 61 : 6) என்பதும், ‘‘துன்னருந்தானைத் தொடுகழலான் றுப்பெதிர்ந்து, முன்னர் வணங்கார் முரண்மருங்க மன்னரு, மீடெலாந் தாங்கி யிகலவிந்தார் நீயுநின், கோடெலாமுன்னங் குழை” (பு - வெ. 243) என்பதும் இங்கே அறியற்பாலன. உன்னம் - இலவமரமென்பது மலைநாட்டு வழக்கென்பர்.

20 - 23. ‘‘இலைமான் பகழிச் சிலைமா ணிரீஇய, அன்பி லாடவ ரலைத் தலிற் பலருடன், வம்பலர் தொலைந்த வருஞ்சுரக் கவலை, அழல்