போற் செவிய சேவ லாட்டி, நிழலொடு கதிக்கு நிணம்புரி முதுநரி, பச்சூன் கொள்ள மாந்திவெய் துற்றுத், தேர்திகழ் வறும்புலந் துழைஇ நீர் நயந்து, பதுக்கை நீழ லொதுக்கிடம் பெறாஅ, வஞ்சுவரு கவலை” (நற், 352) 24. ‘‘நீர்நிசை வேட்கையின்” (மணி. 23 : 112) ; ‘‘பெறனசை வேட்கையி னின்குறி வாய்ப்ப” (கலித். 93 : 17) 25. ‘‘ஒளிப்பினு முள்ளம், படர்ந்ததே கூறு முகம்”, ‘‘நோக்கி, முகனறிவார் முன்ன மறிப” (பழ. 41, 30) ; ‘‘முன்ன, முகம்போல முன்னுரைப்ப தில்” (நான்மணிக். 50) ; ‘‘அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங், கடுத்தது காட்டு முகம்”, ‘‘முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினும், காயினுந் தான்முந் துறும்” (குறள், 706 - 7) 24 - 6. “சுரந்தவான் பொழிந்தற்றாச் சூழநின் றியாவர்க்கும், இரந்தது நசைவாட்டா யென்பது கெடாதோதான்” (கலித். 100 : 11 - 2) ‘‘நிலம்பெயரினு நின்சொற் பெயரல்” (14) என்றதனால், இது செவியறிவுறூஉ வென்னும் துறையாயிற்று. 11 - ஆம் அடியாற் புலவரதுபெயர்க்காரணமும், 13 - ஆம் அடியாற் பாட்டுடைத் தலைவனது பெயரும் விளங்கியவாறறிக. (3) 4 | வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வானத்து வனப்புப்போன்றன தாள், களங்கொளக் கழல்பறைந்தன கொல்ல் லேற்றின் மருப்புப்போன்றன | | 5 | தோல், துவைத்தம்பிற் துளைதோன்றுவ நிலைக்கொராஅ விலக்கம் போன்றன மாவே, எறிபதத்தா னிடங்காட்டக் கறுழ்பொருத செவ்வாயான் எருத்துவவ்விய புலிபோன்றன | | 10 | களிறு, கதவெறியாச் சிவந்துராஅய் நுதிமழுங்கிய வெண்கோட்டான் உயிருண்ணுங் கூற்றுப்போன்றன நீயே, அலங்குளைப் பரீஇயிவுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி | | 15 | மாக்கட னிவந்தெழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ அனையை யாகன் மாறே தாயி றூவாக் குழவி போல ஓவாது கூஉநின் னுடற்றியோர் நாடே. |
|