| நீரில்ல நீளிடைய பார்வ லிருக்கைக் கவின்கண் ணோக்கிற் | | 20 | செந்தொடை பிழையா வன்க ணாடவர் அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும் உன்ன மரத்த துன்னருங் கவலை நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது | | 52 | முன்ன முகத்தி னுணர்ந்தவர் இன்மை தீர்த்தல் வன்மை யானே. |
(பி - ம்.) 7 ‘‘பொன்னினோடை’ 12 ‘லசாவாக்’ 24 ‘வருவதை’ திணையும் துறையும் அவை. பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் பாடியது. (இ - ள்.) உவாநாளின் மதியினது வடிவுபோலும் வடிவினையுடைய உயர்ந்த வெண்கொற்றக்குடை நிலைபெற்ற கடலெல்லைக்கண் நிலத்தை நிழற் செய்ய, காவலாகிய வீரமுரசம் இழுமென முழங்கும் ஓசையையுடைத்தாய் முழங்க, சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும் ஒழியாத வண்மையையுமுடைய பாண்டியர் மரபினுள்ளாய்! குற்றமற்ற கற்பினையுடைய சேயிழைக்குத் தலைவ! பொன்னானியன்ற பட்டத்தையுடைய புகரணிந்த மத்தகத்தினையும், அணுகுதற்கரிய வலியையும், மணநாறும் மத்தத்தினையுமுடைய, கொம்பு படைக்கலமாகக் கொண்டு பகைவர் மதிலின்கட் கதவைக் குத்திக் கயிற்றாற் பிணித்தலைச்செய்த கவிழ்ந்த மணியையணிந்த பக்கத்தையும் பெருங்கையையுமுடைய யானையினது பெரிய கழுத்திடத்தே யிருந்து பரிகாரமில்லாத கூற்றத்தினது பொறுத்தற்கரிய கொலைத்தொழிலுக்கு இளையாத வலிய கையின் கண்ணே ஒள்ளிய வாளினையுடைய பெரும்பெயர்வழுதி! நிலம் பிறழினும் நினது ஆணையாகிய சொற் பிறழாதொழியல்வேண்டும்; பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்தகாலினையும் பூசிப்புலர்ந்த சந்தனத்தையுடைத்தாகிய குறுக்ககன்ற பரந்த மார்பினையு முடையோய்! ஊரில்லாதனவும், பொறுத்தற்கரிய உயங்குதலையுடையனவும், நீரில்லாதனவும், நீண்ட வழியனவுமாகிய, வலம்பலரை நலியச் சேய்மைக் கண்ணே பார்த்திருக்கும் இருப்பினையும், கையாற்கவிக்கப்பட்ட கண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையையும், செவ்விய தொடை பிழையாத தறுகண்மையையுமுடைய மறவர்தாம் அம்பை விடுதலாற் பட்டோரது உடன்மூடிய புதியகற்குவையின்மேலே திருந்திய சிறகினையும் வளைந்த வாயினையுமுடைய பருந்திருந்து வருந்தும் உன்னமரத்தினையுடையவாகிய அணுகுதற்கரிய கவர்த்த வழியின்கண்ணே நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்; அங்ஙனம் வருவது, அவர் மனக்குறிப்பை அவர்
|