20 - 24. இமயம்போலத் துளக்கமின்றி் நெடுங்காலம் நிற்பாயாகவென்றல் மரபு; ‘‘மின்னுமிழ் வைரக் கோட்டு விளங்கொளி யிமய மென்னும், பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமே னிலவி வையம், நின்னடி நிழலின் வைக நேமியஞ் செல்வ னாகி, மன்னுவாய் திருவோ டென்று வாழ்த்திநெய் யேற்றி னாரே” (சீவக. 2417) ; ‘‘துளக்க லாகா நிலையுந் தோற்றமும்.....மலைக்கே” (நன். பாயிரம்) மு. இச்செய்யுள், ‘பால்புளிப்பினும் பகலிருளினும்....நடுக்கின்றி நிலியரோ’ என்றதனாற் செவியறிவுறூஉவும், ‘இமயம் போன்று....நடுக்கின்றி நிலியரோ’ என்றதனால் வாழ்த்தியலுமாயிற்று; இது, ‘‘பகைநிலத்தரசர்க்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பாயென அச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின் “ஓம்படைவாழ்த்தாயிற்று” என்பர்; தொல். புறத்திணை. சூ. 36, ந. இதன் 16 - ஆம் அடியால் பாட்டுடைத்தலைவன் பெயர்க்காரணம் புலப்பட்டவாறு அறிதற்பாலது; ‘‘நாடுகண் ணகற்றிய வுதியஞ் சேரற், பாடிச் சென்ற பரிசிலர் போல, உவவினி வாழிய தோழி”, ‘‘கொடைக்கட னேன்ற கோடா நெஞ்சி, னுதியஞ் சேரல னட்டில் போல, வொலியெழுந்து” (அகநா. 65, 168) என்பவற்றால் இத்தலைவன் குணங்கள் விளங்கும். (2) 3 | உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற ஏம முரச மிழுமென முழங்க நேமி யுய்த்த நேஎ நெஞ்சிற் | | 5 | றவிரா வீகைக் கவுரியர் மருக செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ பொன்னோடைப் புகரணிநுதற் றுன்னருந்திறற் கமழ்கடாஅத் தெயிறுபடை யாக வெயிற்கத விடாஅக் | | 10 | கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி நிலம்பெயரினு நின்சொற்பெயரல் | | 15 | பொலங்கழற்காற் புலர்சாந்தின் விலங்ககன்ற வியன்மார்ப ஊரில்ல வுயவரிய |
|