பக்கம் எண் :

7

பாண்டவரைக் குறிப்பாலுணர்த்திற்று” (நன். வி. சூ. 269) ; ‘‘ஐவரென்னுந் தொகைச் சொல் அறமகன் முதலிய ஐவரையும் குறிப்பான் விளக்கியவாறு காண்க” (இ - வி. சூ. 170, உரை) ; ‘‘அலங்குளை....சினைஇயென்பது தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகதேவனென்பன கொண்டது” (நன். வி. சூ. 360)

14. பொலம்பூந்தும்பை : ‘‘பொலந்தோட்டுப் பைந்தும்பை” ‘‘பொலந்தும்பை” (புறநா. 22 : 20, 97 : 15) ; ‘‘பொலம்பூந்தும்பை” (மதுரைக். 737)

13 - 5. செய்தெனெச்சம் வினைமுதல்வினைகொண்டு முடிந்ததற்கு ‘ஐவரொடு.....கொண்ட’ என்பது மேற்கோள் (நன். மயிலை. சூ. 343; நன். வி. சூ. 344; இ - வி. சூ. 247, உரை) ; ஈரைம் பதின்மரும் பொருது களத் தவியப், பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தே, ராராச் செருவினைவர்” (பெரும்பாண். 415 - 7)

16. ‘‘முதியர்ப் பேணிய வுதியஞ் சேரல், பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை” (அகநா. 233 : 8 - 9) ; ‘‘பெருஞ்சோறு பயந்த திருந்துவேற் றடக்கை” (சிலப். 23 : 55) ; ‘‘ஓரைவ ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த, போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த, சேரன்” (சிலப். 29 : ஊசல் வரி.) பெயரின் ஈற்றயலாகாரம் ஓகாரமாக வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; நன். மயிலை. சூ. 352; நன். வி. சூ. 353.

17. இயற்சீர் வெள்ளடியல்லது பிறவடி ஆசிரியத்துள் மயங்குமென்பதற்கு இவ்வடி மேற்கோள;் தொல். செய். சூ. 62, பேர்.

17 - 8. ‘‘பால்புளித்துப் பகலிருண்டு மாறுபடினும் எக்காலத்தினுந் தப்பா சான்றோர் மெய்ம்மொழி” (பு - வெ. 167, உரை.)

19. ஈரசைச்சீர் நின்று வேற்றுச்சீரோடு ஒன்றிய சிறப்பில் ஆசிரியத்தளைக்கு இவ்வடி மேற்கோள்; யா. வி. சூ. 19.

20. ரகரமெய்யீற்று வியங்கோள்முற்றிக்கு இவ்வடி மேற்கோள்; நன். மயிலை. சூ. 337; நன். வி. சூ. 338; இ - வி. சூ. 239, உரை.

21 - 3. நெருப்பிற்கு அஞ்சிப் புலி வாராமையின் கவலையின்றி மான்கள் தூங்குமென்பர்; ‘‘கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து, மடமான் பெருநிரை வைகுதுயில்” (புறநா. 247 : 2 - 3) ; ‘‘ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉம்” (ஐங்குறு. 307)

22 - 3. ‘‘ஒன்றுபிரிந் தடங்கிய விருபிறப் பாளர், முத்தீப் புரைய” (புறநா. 367 : 12 - 3) ; ‘‘மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத், திருபிறப் பாளர்” (முருகு. 181 - 2)

24. இமயம் பொற்கோட்டதென்பது : (புறநா. 39 : 14 - 5, 369; 24; நற். 356; யா. கா. அவை. 2) . இனமில்லாத பொருள் அடையடுத்த மொழிக்கு இவ்வடி மேற்கோள்; நன். மயிலை. சூ. 400; நன். வி. சூ. 401; இ. வி. சூ. 312, உரை.