போற்றார்ப்பொறுத்தல் முதலிய குணங்களையுடையோய், பொருந, வரையாதுகொடுத்தோய், வானவரம்ப, பெரும, நீ, புளிப்பினும் இருளினும் திரியினும் இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றிச் சுற்றமொடு விளங்கி நிற்பாயாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. போற்றார்ப்பொறுத்தல் முதலாகிய குணங்களை அரசியலடைவாற் கூறுகின்றாராதலின், பூதங்களின் அடைவு கூறாராயினார். இதனாற் சொல்லியது, தன்கடற்பிறந்தஞாயிறு தன்கடற்குளிக்கும் நாடனாதலாற் (பி - ம். வானவரம்பனாதலாற்) செல்வமுடையையாகவென்று வாழ்த்தவேண்டுவதின்மையின், நீடு வாழ்கவென வாழ்த்தியவாறாயிற்று. (கு - ரை.) 1. ‘‘மண்கெழு ஞாலம்” (பதிற். 69 : 12) ; ‘‘மண்டிணி ஞால மாள்வோன்” (சிலப். 26 : 42) ; ‘‘மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு” (மணி. 11 : 95) 1 - 3. ‘‘மண்டிணிந்த......வளியும் என்பது எண்” (தொல். இடை. சூ. 7, தெய்வச்,; ந.) 4 - 5. ‘‘வளித்தலைஇய.....நீருமென்றாஅங்கென நாற்சீரடிக்கு இருசீரும் முச்சீரும் பொருந்தி ஆசிரியம் வந்தது” (தொல். செய். சூ. 115, ந.) 1 - 5. ‘‘அல்லதூஉம் நேரீற்றியற்சீர் இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை யெனப்படும்; மண்டிணிந்த....நீரும்” (தொல். செய். சூ. 26, பேர்.) ; ‘‘மண்டிணிந்த.....நீருமென ஈற்றுக்கண்வருதல் பெரும்பான்மையாதலின் இறுதிநில்லாவெனப் பொருள் கூறலாகாமையுணர்க” (தொல். செய். சூ. 26, ந.) ; ‘‘மண்டிணிந்த.....நீரும் : இவ்வஞ்சியடி யிறுதி நேரீற்றியற்சீர் சிறுபான்மை வந்தது” (யா - வி. சூ. 15) 7. குறள், 152. 2 - 7. ‘‘விசும்பி னன்ன சூழ்ச்சி” (தொல். உவம. சூ. 6, பேர். மேற்.) 8. பெரும்பாண். 422; ‘‘அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்ய வேண்டுதலின்” (குறள், 582, பரிமேல்.) 4 - 8. ‘‘வளிமிகின் வலியுமில்லை’‘ (புறநா. 51 : 3) 3 - 8. ‘‘வளியிடைத், தீயெழுந் தன்ன திறலினர்” (முருகு. 170 - 71) 1 - 8. நிரனிறை. 10. ‘‘வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப” (புறநா. 31 : 14) ; ‘‘வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத” (சிலப். 26 : 81) 12. ‘‘கானக நாடனை நீயோ பெரும” (புறநா. 5 : 3) ; ‘‘வான வரம்பனெனப் பேரினிது விளக்கி” (பதிற். 6-ஆம் பத்தின் பதிகம்.) 13. ‘‘ஐவர் : குறிப்பினால் தொகைப்பொருள் அறிய வந்தது” (நன். மயிலை. சூ, 268) ; ‘‘ஐவரென்னுந் தொகைக்குறிப்புச்சொற்
|