(கு - ரை.) 1 - 2 நேரசை கூனாய்நின்றதற்கு இவ்வடிகள் மேற்கோள்; தொல். செய். சூ. 48; பேர்.; 49, ந. 3. களத்தைத் தமதாக்கிக் கொள்ளுதல் : புறநா. 53 : 5. கு - ரை. ‘‘வென்று களங்கொண்ட வேல்வேந்தே” (பு - வெ. 225) என்பதனாலும், ‘‘தேன்மிடைந்த தாரினான் செங்களஞ் சிறந்ததே” (சீவக. 279) என்பதற்கு எழுதப்பட்ட ‘இத்துணையும் இவன் வெற்றியாதலின் இவன் களமென்றார்’ என்னும் குறிப்புரையாலும் விளங்கும். ‘‘பறைதாள் விளவு” (பெரும்பாண். 95) . இவ்வடி பதினோரெழுத் திருசீரடி வஞ்சிப்பாவிற்கு மேற்கோள்; யா - வி. ஒழிபியல், சூ. 95. 5. துவையென்னும் உரிச்சொல் ஓசைப்பொருளில் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; நன். மயிலை. சூ. 458; நன். வி. சூ. 459. 5 - 6. குறளடியும் சிந்தடியும் வந்தமையான் மயக்கடி வஞ்சிப் பாட்டானதற்கு மேற்கோள்; தொல். செய். சூ. 47. ந. 6. ‘‘கம்பமொடு துளங்கிய விலக்கம்” (புறநா. 260 : 23) 9. ‘எருத்துவ்விய’ எனப்பாடங்கொண்டு எரு, இறைச்சியெனப் பொருள்கூறுவர் தக்க. உரையாசிரியர் (386) 10 - 11. கடிமதிற் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணைவெண்கோட்டுச், சிறுகண்யானை” (அகநா. 24 : 11 - 3) 10 - 12. களிறு....போன்றன; நிரைபசை வஞ்சியடியிற் கூனாய் வந்ததற்கு மேற்கோள்; தொல். செய். சூ. 48, பேர்.; ந. 13. புறநா. 2 - 13. 15 - 6. ‘‘பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங், கோவறவிமைக்குஞ் சேண்விளங் கவிரொளி” (முருகு. 2 - 3) ; தொல். கிளவி. சூ. 18 : தெய்வச்.; கல். மேற்.; புறநா. 228 : 8 - 9; பு - வெ. 201) ; சீவக. 2371. 13 - 6. வாழ்த்து வகையில் தேரடுத்து வந்ததற்கு இதுமேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 31. ந. 17. மு. புறநா. 20 : 20; பதிற். 80 : 12. மாறு, மூன்றாம்வேற்றுமைப் பொருட்கண் வருமென்பதற்கும் (தொல். இடை. சூ. 2, சே.; இ - வி. சூ. 251, உரை) , காரணப்பொருளுணர்த்தி நிற்குமென்பதற்கும் (தொல். இடை. சூ. 2, ந.) , ஆகலென்னும் வினைக்குறிப்புச்சொல் சார்ந்து நின்ற சொற்பொருளையே உணர்த்தி நிற்குமென்பதற்கும் முச்சீரடி இடை வந்ததற்கும் (தொல். இடை. சூ. 32, ந.; தொல். செய். சூ. 71, பேர்.) இது மேற்கோள். 18 - 9. ‘‘ஈன்றோ ணீத்த குழவி போல”, தாயி, றூவாக் குழவி போல” (புறநா. 230 : 7, 379 : 14 - 5) ; ‘‘குழவிகொள் வாரிற் குடிபுறந்தந்து” (பதிற். 6 - ஆம்பத்துப் பதிகம்) ; ‘‘தாயிலாக் குழவி போலச் சாதுய ரெய்துகின்றேன்; (சீவக. 1581) ; ‘தாயி றூவாக் குழவித்துயர்” ‘‘தாயொழி குழவி போலக் கூஉம்” (மணி. 13 : 11, 25 : 111) ;
|