‘‘ஓங்குகுடை நீழ லுலகுதுயின் மடியக், குழவிகொள் பவரி னிகழா தோம்பி” (பெருங். 4. 10 : 133 - 4) 15 - 9. வஞ்சிப்பா மண்டில ஆசிரியத்தான் இற்றதற்கு மேற்கோள்; தொல். செய். சூ., 71, பேர். இதன் 14 - ஆம் அடியாற் பாட்டுடைத்தலைவனது பெயர்க்காரணம் புலப்படுகின்றது. (4) 5 | எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும நீயோ ராகலி னின்னொன்று மொழிவல் | | 5 | அருளு மன்பு நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல் குழவி கொள்பவரி னோம்புமதி அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. |
திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியுமாம். சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலிரும்பொறையைக் கண்டஞான்று நின் உடம்பு பெறுவாயாகென அவனைச் சென்று கண்டு தம்முடம்பு பெற்றுநின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது. (இ - ள்.) எருமைபோலும் வடிவையுடைய கரிய கற்பொருந்திய இடந்தோறும் பெற்றம்போலப் பரக்கும் யானையையுடையவாய் வலியையுடைய காட்டிற்குள்ளாகிய நாட்டினையுடையாய்! பெரும! நீ இங்ஙனம் பகைவரான் அணுகப்படாத இயல்பாகிய பெருஞ்செல்வத்தையுடைய னாதலால், நினக்கு ஒரு காரியஞ் சொல்வேன்; அதனைக் கேட்பாயாக; அருளையும் அன்பையும் நீக்கிப் பாவஞ்செய்தாரை நீங்காத நரகத்தைத் தமக்கிடமாகக் கொள்பவரோடு பொருந்தாது நீ காக்கப்படும் தேயத்தைக் குழவியை வளர்ப்பாரைப்போலப் பாதுகாப்பாயாக; அளிக்கத்தக்க தொன்று அக்காவல்; அது பெறுதற்கரிது, எ - று. காவலென்றது (7) ஆகுபெயர். நாடனை (3) : ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. ஓவும், ஓரும் : அசைநிலை. அருளாவது: - ஒன்றின் துயர்கண்டாற் காரணமின்றித்தோன்றும் இரக்கம் (தொல். பொருள். 53, ந.) அன்பாவது: - தன்னாற் புரக்கப்படுவார் மேலுளதாகிய காதல். (தொல். பொருள். 53, ந.)
|