பக்கம் எண் :

16

இனி, ஓகாரத்தைப் பிரித்து வினாவாக்கிக் கோப்பெருஞ்சேரலிரும் பொறையைக் கண்டஞான்று நின்னுடம்புபெறுவாயெனத் தம்முடம்பு பெற்றமை தோன்ற, நீயோவென வினாவினாராக்கியுரைப்பாருமுளர்.

காவல் குழவிகொள்பவரினோம்பென்றமையாற் செவியறிவுறூஉவும், அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங்கொள்பவரொடொன்றாதென்றமையாற் பொருண்மொழிக் காஞ்சியுமாயிற்று.

(கு - ரை.) 1. ‘‘மேதி யன்ன கல்” (மலைபடு. 111)

2. ஆபரந் தன்ன செலவிற்பல், யானை”, ‘‘ஆபரந்தன்ன யானையோன் குன்றே” (பதிற். 77 : 11 - 2, 78 : 14)

3. ‘‘வான வரம்பனை நீயோ பெரும” (புறநா. 2 : 12) ; தொல். இடை. சூ. 8. தெய்வச். மேற்.

1 - 3. ‘‘எருமை........பெருமவென்பது, நரிவெரூஉத்தலையார் தம் உடம்பு பெற்று வியந்து கூறிய பாட்டாகலின், இது தன்கட்டோன்றிய ஆக்கம் பற்றி வியப்புப் பிறந்ததாயிற்று” (தொல். மெய். சூ. 7, பேர்.; இ. வி. சூ. 578)
6 - 7. புறநா. 4 : 18-9-ஆம் குறிப்புரையைப் பார்க்க. மக்கட் கணின்ற இளமைப்பெயர்க்கு இது மேற்கோள்; தொல். மரபு. சூ. 23, பேர்.

8. ‘‘அளிதோ.....குரைத்தே : இஃது இசைநிறை” (தொல். இடை. சூ. 24. சே.; தெய்வச்.; ந.; இ. வி. சூ. 278) ; ‘‘என்றிசினோர், பெறலருங்குரைத்து என்பன போலச் செய்யுண் முடிபு பெற்று நின்றதென்றலே பொருத்த முடைத்து” (தொல். எச்ச. சூ. 1, சே.) ; குரையென்னும் அசைநிலையிடைச்சொல் வந்துள்ளதொடர்மொழிக்கு இது மேற்கோள் (நன். மயிலை. சூ. 440; நன். வி. சூ. 441) . ‘‘கண்ணிற் சொலிச் செவியி னோக்கு மிறைமாட்சி, புண்ணியத்தின் பாலதே” (நீதிநெறி. 28) என்பது இங்கே அறியற்பாலது.

மு : ‘‘எருமை......குரைத்தே : இதனுள் நிரயங்கொள்பவரொடொன்றாது காவலையோம்பென வேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி அவற்கு உறுதி பயத்தலின், வாயுறைவாழ்த்தாயிற்று” (தொல். புறத்திணை. சூ. 35, ந.)

(5)

6

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்
5கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழு மேல
தானிலை யுலகத் தானு மானா