பக்கம் எண் :

17

துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம்
10பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
15தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
20நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே
வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே
25ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே.

(பி - ம்.) 9 ‘தெரிகோற்சமன்போல’ 10 ‘பற்றிலியரே’ 12 ‘யடர்ப்புகர்ச்’ 13 ‘னேஎய்ப்’ 17 ‘பணீஇயரத்தை’ 20 ‘நான்மறை முதல்வ’ 21 ‘வியவுணின்’ 23 ‘சொலிகவத்தைநின்’ 29 ‘மன்னுக’

திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலுமாம்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது.

(இ - ள்.) வடக்கின்கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும், தெற்கின்கண்ணது உட்குந்திறம் பொருந்திய 1கன்னியாற்றின்


உரை. 1. கன்னியாறு : பாண்டிநாட்டைக் கன்னிநாடென்பது இதனாலும் இருத்தல் கூடும்; வேறு கூறுவாருமுளர்; திருவிளை. தடாதகைப். 61