(கு - ரை.) 2. பரிசின் மாக்கள் : புறநா. 6 : 16, 24; 30. 3. வரிசை : புறநா. 6 : 16; 47 : 6; "வரிசை யறிதலும்" (சிறுபாண். 217) ; "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அது நோக்கி வாழ்வார் பலர்" (குறள், 528) ; "தத்தம், வரிசையா னின்புறூஉமேல்" (நான்மணிக். 67) 5. மு. புறநா. 35 : 30. மு. பாடாண்டிணைக்குரிய விடைகள் பலவற்றுள், சிறிதென்ற விடைக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 36, ந. (121) 122 | கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார் கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே வீயாத் திருவின் விறல்கெழு தானை | | 5 | மூவரு ளொருவன் றுப்பா கியரென ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை | | 10 | நினதென விலைநீ பெருமிதத் தையே. |
திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி. அவனை அவர் பாடியது. (இ - ள்.) கடலாற் கொள்ளப்படாது, அதனைக் கொள்ளுதற்குப் பகைவர் மேற்கொள்ளார், வீரக்கழலணிந்த 1இலக்கணத்தாற்றிருந்திய நல்ல அடியையுடைய காரி! நினது நாடு; அது வேள்வித்தீயைப் பாதுகாக்கும் பார்ப்பாருடையது; கெடாத செல்வத்தினையும் வென்றிபொருந்திய படையையுமுடைய மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாகவேண்டுமென்று அம்மூவர்பானின்றும் வந்தோர் தனித்தனி புகழ்ந்து நினக்குத் தரும்பொருள், நுமது குடியை வாழ்த்தினராய்வரும் பரிசிலருடையது; ஆதலால் வடதிசைக்கட்டோன்றும் அருந்ததியையொக்கும் கற்பினையும் மெல்லிய மொழியினையுமுடைய அரிவையுடைய தோள்மாத்திரை யல்லது நின்னுடையதென்று சொல்ல ஒன்றுடையையல்லையாயிருக்கவும் நீ பெரிய செருக்கினையுடையையாய் இராநின்றாய்; இதற்குக் காரணம் என்னை?-எ-று. ஏத்தினர்தரூஉமென்று பன்மையாற்கூறியது அவ்வேந்தன் அமைச்சரை.
1.திருந்தடி யென்பதற்குப் பிறக்கிடாத அடியென்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்; மதுரைக். 436, உரை.
|