மூவருள் யான் ஒருவன்; எனக்குத் துப்பாகியரென அம்மூவரும் ஏத்தினர்தரூஉமென்று உரைப்பினும் அமையும். நாடு அந்தணரது; கூழ் இரவலரது; அரிவைதோளளவல்லதை நினக்கு உரித்தாகக் கூறுதற்கு யாதும் இல்லையாயிருந்தது; நீ பெருமிதத்தை யுடையையாயிருந்தாயென வியந்து கூறியவாறு. (கு - ரை.) 1- 3. காரியின்நாடு மலையும் மலைசார்ந்த இடமுமாதலின், இங்ஙனங் கூறினார்; இவன் இராசதானி பெண்ணையாற்றங் கரையிலுள்ள திருக்கோவலூரென்று, "துஞ்சா முழவிற் கோவற் கோமான், நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப், பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல்" (அகநா. 35) என்பதனால் தெரிகின்றது; "கறங்குமணி, வாலுளைப் புரவியொடு வையக மருள, ஈர நன்மொழி யிரவலர்க் கீந்த, அழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற், கழறொடித் தடக்கைக் காரியும்" (சிறுபாண். 91 - 5) 5. புறநா. 125, கருத்து; "முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன்" (குறுந். 312 : 2) 6 - 7. "வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும், அருகா தீயும் வண்மை, உரைசா னெடுந்தகை" (புறநா. 320 : 16 - 8) 8. "பெருநல் வானத்து வடவயின் விளங்கும், சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்" (பெரும்பாண். 302 - 3) ; "வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினாள்" (கலித். 2) 9. அரிவை யென்றது மலையமான் திருமுடிக்காரியின் மனைவியை. (122) 123 | நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின் யார்க்கு மெளிதே தேரீ தல்லே தொலையா நல்லிசை விளங்கு மலையன் மகிழா தீத்த விழையணி நெடுந்தேர் | | 5 | பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி யுறையினும் பலவே. |
திணையும் துறையும் அவை. அவனை அவர் பாடியது. (இ - ள்.) நாட்காலையே மதுவையுண்டு நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின், தேர்வழங்குதல் யாவர்க்கும் எளிது; கெடாத நல்லபுகழ் விளங்கும் மலையன் மதுநுகர்ந்து மகிழாது வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர், பயன்பொருந்திய முள்ளூர்மலையுச்சியின் கண் உண்டாகிய மழையினது துளியினும் பல-எ - று. இதன்கருத்து: ஏனையோர்கொடை செயற்கையென்றும், இவன் கொடை இயற்கை யென்றும் கூறியவாறு.
|