ஒழுகவென்னுமெச்சம் (1) நுகருமென ஒருசொல் வருவித்து அதனோடு கூட்டி முடிக்கப்பட்டது; ஒழுகவும் போகம் நுகரவும் வேண்டி யெனினும் அமையும். வேண்டி, பொறாது, துரப்ப என நின்ற வினையெச்சங்கள் ஒடுங்காவென்னும் பெயரெச்சமறையின் முதனிலையோடு முடிந்தன. இனி, ‘பகல்விளங்கலை‘ என்னும் பாடத்திற்குத் 1திங்கண்மண்டிலமாக்கி, ‘மாறிவருதி’ என்பதற்குத் தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும் பிறவும் அதற்கேற்ப வுரைப்ப (உரைப்பவர் இளம்பூரணர்) (கு - ரை.) 1. ‘‘தொன்றுபட்டு வழிமொழிய” (புறநா. 17 : 4) 2. புறநா. 51 : 45; 189 : 1 - 2 ‘‘பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு” (கலித். 68) ; ‘‘அரசன் போகம் வேண்டிப் பொதுச் சொற் பொறானாய்” (நெடுநல். அவதாரிகை) ; ‘‘கொடியு முரசுங் கொற்ற வெண் குடையும், பிறர்கொளப் பொறாஅன் றானே கொண்டு” (சிதம்பர மும்மணி. 25) 4. ‘‘ஓம்பா தீயு மாற்ற லெங்கோ” (புறநா. 23 : 33) ; ‘‘ஓம்பா வீகையின் வண்மகிழ் சுரந்து” (பதிற். 42 : 13) 5. ‘‘ஒன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற, வென்வேலான்” (கலித். 27 : 15 - 6) 6. யாங்கனம் : ‘‘நீங்கு கென்றியான் யாங்கன மொழிகோ” (அகநா. 90 : 8) ; ‘‘யாங்கனம் வந்தனை” (மணி. 5 : 41) . ஒக்குமெனக் கூறாமல் ஒவ்வாதெனக்கூறலும் உவமையாமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம. சூ. 33, பேர். 7. ‘‘மலர்ந்த ஞாலம் புலம்புபறக் கொடுப்ப” (அகநா. 4 : 5) ; ‘‘அழிகுநர் புறக்கொடை” (பு. வெ. 55, கொளு.) 8. புறநா. 65 : 6 - 8. 10. புறநா. 374 : 17 - 8. மு. ‘‘ஒரீஇக் கூறலும்” (தொல். உவம. சூ. 35, இளம்.) என்பதற்கு மேற்கோள்; ‘‘வையங் காவல......பல்கதிர் விரித்தே’ என்னும் பாட்டினுள், ‘கடந்தடு தானைச் சேரலாதனை’ என்னுந்துணை உவமத்
1. புறநா. 27 : 11 - 4; ‘‘மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும், தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால்” ('சீவக. 2932) ; ‘‘உலகினர் செல்வ நந்த லுரைப்பொரு ளிரண்டுங் கோடல், இலகுவெண்மதியங் காட்ட வென்றுமோர் தகைத்தாய்ச் சேறல், விலகுதஞ் செல்வ மெங்கள் விழுப்பொரு ளாய வண்ணல், அலகில்செஞ் சோதிப் பின்னலணிமதி யுணர்த்த வாழ்வார்” (கூவப். நைமிசா. 14) ; ‘‘அகன்மதி வளர்ந்து தேய்ந்தற் றச்சக போகத் தன்மை, நகலுறக் காட்ட” (தியாக. நைமிச. 16)
|