பக்கம் எண் :

25

திற்கு வந்த அடையினைப் பொருட்கு மறுத்துக் கொள்ளவைத்தானென்பது. என்னை? வெஞ்சுடர் வழியென்னுந்துணை உவமத்திற்குரிய அடையினைப் பொருட்கு மறுத்துக் கொள்ளவைத்தானென்பது. இனி, ‘பொழுதென வரைதி’ என்பது தொடங்கிப் பாட்டு முடிகாறும் பொருட்குரிய அடையினை உவமத்திற்கு மறுத்துக் கொள்ளவைத்தானென்பது. என்னை ? வெஞ்சுடர் வழித்தோன்றிய அரசனைத் தண்சுடரோடு உவமிப்பான், ‘பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும்’ என்றதனாற் பொருளினை உவமையாகக்கூறாது உள்ளுறையுவமம்போலக் கொள்ளவைத்துப் பின்னர் உவமத்திற்கு அடையாயவற்றுள், ‘வையங்காவலர் வழிமொழிந்தொழுக’ என்றான். வழிமொழிதலென்பது வேற்றரசர்க்குத் தம் தன்மையென வேறின்றித் தன்னகப்படுத்தல்; ஆதலால் தத்தம் ஒளியொடு படுத்து ஒழிந்தகோளுஞ் செல்லத் தானுஞ் செல்லும் மதியமென்று எதிர்மறுத்துக் குற்றங்கூறும் குறிப்புப்படவைத்தானென்பது. ‘போகம் வேண்டி பொதுச்சொற் பொறாஅது’ எனவே இன்பநுகர்வு முற்றுச் சிறப்பில்லாக் கட்டுரை யெய்தானெனவும் அவனோடு உவமிக்கின்ற மதியமாயின் இருபத்தெழுவர்மகளிரொடு போகந்துய்த்துச் சிறப்பில்லாத கட்டுரை புனையுமென்றும் எதிர்மறுத்துக் கொள்ளவைத்தான். சிறப்பின்மையென்பது, எல்லார்க்கும் ஒத்தவாற்றான் அறஞ்செய்யாது உரோகிணிமேற் கழிபெருங்காதலனெனப்படுதல் போல்வன. ‘இடஞ் சிறிதென்னு மூக்கந்துரப்ப’ எனவே, எஞ்ஞான்றுந் தன்னெல்லைக்கண்ணே வரும், மதிமண்டிலமென்று எதிர்மறுத்துக்கொள்ளப்படும். ‘ஒடுங்காவுள்ளம்’ எனவே மதியம் தேய்ந்தொடுங்கு மென்பது கொள்ளப்படும். ‘ஓம்பா வீகை’ எனவே, நாடோறும் ஒரோவோர் கலையாகப் பல்லுயிர்க்கும் இன்பம் பயக்குமாற்றால் தருவதல்லது தானுடையதெல்லாம் ஒரு காலே கொடாத மதியமெனப்படும். ‘கடந்தடுதானை’ எனவே மதிக்குத் தானையாகிய தாரகையெல்லாம் பகைக்கதிராகிய பருதிமண்டிலத்துக்குத் தோற்குமென்றானாம். இவ்வாற்றான் உவமான அடையெல்லாம் எதிர் மறுத்துக்கொள்ளப்பட்டன. இனி, பொருட்குரிய அடையும் அவ்வாறே எதிர்மறுத்துக்கொள்ளப்படு மென்றவாறு. ‘விலங்குசெலன்மண்டிலம்’ எனவே, கடையாயினார் கதியிற் செல்லு மதியமென்று பாட்டுடைத்தலைவன் தலையாயினார் கதியிற்செல்லுமென்றான். ‘பொழுதென வரைதி’ எனவே, நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தியென்றதனான் இவன் பொழுது செய்யானெனவும், ‘புறக்கொடுத்திறத்தி’ எனவே, தோற்றார் போன்று ஒளி மழுங்கிச் செல்கின்றாயென்பதனால் சுடர்போல விளங்கிப் பிறர் தோற்றோடக்காயும் இவனெனவும், ‘மாறிவருதி’ எனவே, திங்கடோறுமாறிப் பிறத்தியென்பதனான் இவன் நிலைபெற்றானெனவும், ‘மலைமறைந்தொளித்தி’ எனவே மாலைசார்ந்தவழித் தோன்றாயென்பதனான் இவன் தன்னாட்டு மலைமீக்கூறுமெனவும், ‘அகலிரு விசும்பி