பக்கம் எண் :

240

‘அன்றி‘ என்னும் குறிப்புவினையெச்சத்தின் ஈற்று இகரம் செய்யுளில் உகரமாகத் திரிந்துவந்ததற்கும் (தொல். உயிர்மயங்கு. சூ. 35, இளம்., ந.; நன். சூ. 172, மயிலை. நன். வி. சூ. 173; இ. வி.சூ. 91, உரை) , அது செய்தெனெச்ச வினைக்குறிப்பாய் வந்ததற்கும் (தொல். வினை. சூ. 34, தெய்வச்.; சூ. 31, ந.; நன். சூ. 343, மயிலை,; இ. வி. சூ. 246, உரை) மேற்கோள்.

2. திறனன்று மொழிதல்: "திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும், பொருளு மதனினூஉங் கில்" (குறள், 644)
1 - 3. குறுந். 140.

வினையெச்சக்குறிப்பு அடுக்கிவந்து ஒருவினை கொண்டதற்கு மேற் கோள் (நன். சூ. 354, மயிலை.) ; இவை அடுக்காகா வென்பர் விருத்தி யுரையாசிரியர்; நன். சூ. 355.

4. புறநா. 369 : 22 - 3. மு. புறநா. 92.

(124)

125

பருத்திப் பெண்டின் பனுவ லன்ன
நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர
உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே
5நள்ளாதார் மிடல்சாய்த்த
வல்லாளநின் மகிழிருக்கையே
உழுத நோன்பக டழிதின் றாங்கு
நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே
குன்றத் தன்ன களிறு பெயரக்
10கடந்தட்டு வென்றோனு நிற்கூ றும்மே
வெலீஇயோ னிவனெனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேன் மலைய னல்ல னாயின்
15நல்லமர் கடத்த லெளிதும னமக்கெனத்
தோற்றோன் றானு நிற்கூ றும்மே
தொலைஇயோ னிவனென
ஒருநீ யாயினை பெரும பெருமழைக்
கிருக்கை சான்ற வுயர்மலைத்
2020 திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.

(பி - ம்.) 13 ‘சமரந்’

திணை - வாகை; துறை - அரசவாகை.