பக்கம் எண் :

27

நிழற்றும் களிற்றினையுமென மாறிக் கூட்டுவாருமுளர். தங்கோச் செந்நீர்ப் பசும் பொனென்பதற்குத் (9 - 10) தமதரசாட்சியினது செவ்விய நீர்மையாற் செய்த பசும்பொனென்பாருமுளர்.

முந்நீர்க்கண் வடிம்பலம்ப நின்றானென்ற வியப்பால், நெடியோ னென்றாரென்ப. யாற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீருமுடைமையால், கடற்கு 1முந்நீர் என்ற பெயராயிற்று; அன்றி, முன்னீரென்றோதி, 2நிலத்திற்கு முன்னாகிய நீரென்றுமுரைப்ப.

பிணியுடையீரும் புதல்வர்ப்பெறாதீருமென்னும் முன்னிலைப் பெயரோடு ஆவும் பார்ப்பனமாக்களும் பெண்டிருமென்னும் படர்க்கைப் பெயர்கள் விராய்வந்து, நும்மரண் சேர்மினென்னும் முன்னிலைவினையான் முடிதல், 3 ‘‘செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும்” என்னும் அதிகாரப்புறனடையாற் கொள்ளப்படும்.

(கு - ரை.) 1. சிறிதும் தீங்குசெய்யத்தகாத சாதியாகலின், பசு முற்கூறப்பட்டது; ‘‘ஆவு மாவுங் கொண்டுகழி கென்றே” (மணி. 9 : 25)

1 - 2. தொல். விளி. சூ. 8, தெய்வச். மேற்.; ‘‘ஆவு மானியற்........ பிணியுடையீரும்’ என்றாற் போலும் அண்மைவிளியும் இதனாற் கொள்க” (தொல். விளி. சூ. 12, ந.)

4. ‘‘பொன்போற் புதல்வனோ டென்னீத் தோனே” (ஐங்குறு. 265 : 4.) புதல்வன் செல்வமென்பது; கலித். 85 : 34 - 6, ந.

5. ‘‘எம்மம்பு....சேர்மி னென்பது விரைவு” (நன். மயிலை. சூ. 456; நன். வி. சூ. 457)

1 - 5. ‘‘மண்டமர் மேல்கொடு வந்தன மின்னே, தண்டக நாட்டுறை தாபதர் நோயோர், பெண்டிரு நும்மர ணேகுதிர் பெட்டென்,


1. ‘‘முந்நீர் - கடல்; ஆகுபெயர்; ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீரென இவையென்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர் மேனீராதலானும் இவ்விரண்டு மில்வழி ஊற்றுநீரும் இன்றாமாதலானும் இவற்றை முந்நீரென்றல் பொருந்தியதன்று; முதிய நீரெனின், ‘‘நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும்” (குறள். 17) என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது;
ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோவெனின் முச்செய்கையையுடைய நீர் முந்நீரென்பது; முச்செய்கை யாவன மண்ணைப் படைத்தலும் மண்ணை யழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்” என்பர் அடியார்க்குநல்லார் (சிலப். 17 : முந்நீரின்) ; பெரும்பாண். 441; சீவக. 5, ந. பார்க்க.

2. இங்ஙனம் கூறியது பூதங்களின் தோற்ற முறைபற்றி.

3. தொல். எச்ச. 67.