பக்கம் எண் :

28

றெண்டிசை யார்ப்ப விசைப்பறை சாற்றி” (காஞ்சிப். நாடு. 21) . ‘‘ஆவும் .....சேர்மினெனத் திணைவிராய்வந்து முன்னிலை வினைகோடல் எற்றாற் பெறுதுமெனின், - அந் நிகரன செய்யுண்முடிபெனப்படும்; அவற்றை அதிகாரப்புறனடையாற் கொள்க” (தொல். கிளவி. சூ. 45, சே.) ; ‘‘ஆவு மானியற் பார்ப்பன மாக்களுமென எண்ணி ‘நும்மரண் சேர்மின்’ என முன்னிலைவினைகோடல் செய்யுண்முடிபென்பது அதிகாரப் புறனடையாற்கொள்க” (தொல். கிளவி. சூ. 45, ந.) ; ‘‘ஆவுமானியற் பார்ப்பன மாக்களும்.......சேர்மின் என ளகரவீற்று உயர்திணைப் பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின” (இ. வி. சூ. 207, உரை)

6. ‘‘அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்” (புறநா. 62 : 7) ‘‘சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாம், சொல்லிய வண்ணஞ் செயல்” (குறள், 664) என்பதும், ‘‘சிறப்புடை அரசியலாவன : மடிந்த உள்ளத் தோனையும் மகப்பெறாதோனையும் மயிர்குலைந்தோனையும் அடி பிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்தபடை யெடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப்பொருதலும் முதலியனவாம்” (தொல். புறத்திணை. சூ. 10, ந.) என்பதும் இங்கே அறியற்பாலன.

1 - 6. ‘‘இருபெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர், ஒருவர் நாட்டுவாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்கு செய்யத்தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டு வந்து பாதுகாத்தலும் தீதெனப்படாது அறமேயாமென்றற்கு ‘ஆதந் தோம்பல்’ என்றான்; அஃது ‘ஆவும்....மறத்தின்’ எனச் சான்றோர் கூறியவாற்றா னுணர்க; மன்னுயிர்காக்கும் அன்புடை வேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழுமென்றற்கு, ‘மேவற்றாகும்’ என்றான்” (தொல். புறத்திணை. சூ. 2, ந.; இ. வி. 602, உரை) என்பனவும், ‘‘நான்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பார், என்பாரை யோம்பே னெனின்யானவ னாக வென்றான்” (சீவக. 443) என்பதும் இங்கே அறியத்தக்கவை.

7. மீமிசை : ‘‘ஓங்குயர் சமந்தத் துச்சி மீமிசை” (மணி. 19 : 22) . யானைமேற் கொடி : பதிற். 52 : 1, 69 : 1 - 2, 88 : 17; நெடுநல். 87; கம்ப. சம்புமாலி. 26.

9. செந்நீர்ப் பசும்பொன் - நால்வகைப் பொன்னுட் கிளிச்சிறை யென்பது; ‘‘செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை” (மதுரைக். 410.)

10. முன்னொரு காலத்தில் மதுரையை அழித்தற்கு வந்த கடலை உக்கிர குமார பாண்டியனென்பவன்,