பக்கம் எண் :

29

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தில் 21 - ஆவதிலுள்ள 6 - ஆம் விருத்தம் முதலியவற்றாலுணர்க : ‘‘அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவேலெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத் துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” (சிலப். 11 : 17 - 20) , ‘‘ஆழி வடிம்பலம்ப நின்றானும்” (நள. சுயம். 137) , ‘‘கடல்வடிம்பலம்ப நின்ற கைதவன்” (வி. பா. 15 - ஆம் போர். 18) எனவும் வருபவை இதனை வலியுறுத்தும். நெடியோன் : ‘‘பொலந்தார் மார்பினெடியோ னும்பல்” (மதுரைக். 61) ; ‘‘உரைசால் சிறப்பி னெடியோனன்ன, அரைச பூதம்” (சிலப். 22 : 60 - 61)

11. பஃறுளியாறு : சிலப். 11 : 19.

8 - 11. ஓர் அரசரை வாழ்த்துகையில் அவரை அவர்க்குரிய ஆற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலின் இங்ஙனம் கூறினார்; புறநா. 43 : 21 - 3: ‘‘மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள், தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28 : 125 - 6)

மு. இச்செய்யுள், பொருளின்றுய்த்த பேராண்பக்கத்திற்கும், இயன்மொழிவாழ்த்திற்கும் (தொல். புறத். சூ. 7, 29, இளம்.) உதாரணமாக முறையே காட்டப்பட்டுள்ளது.

(9)

10

வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி யத்தக வொறுத்தி
5வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற்
றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே
அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்த லல்லது மள்ளர்
10மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கான னெடியோய்
எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே.

திணையும் துறையும் அவை.

சோழன் நெய்தலங்கானல் (பி - ம். நெய்தலங்காலை) இளஞ் சேட் சென்னியை ஊன்பொதி பசுங்1குடையார் பாடியது.

(இ - ள்.) நின்னை வழிபட்டொழுகுவோரை விரையஅறிவை; பிறருடைய குற்றஞ்சொல்லுவாரது வார்த்தையைத் தெளிவாய்; நீ மெய்யாக


1. குடை - பனை ஓலையால் செய்யப்படுகிறது.