3. ‘‘ஒன்றானுங் குறைவில்லை யூர்திவெள்ளேறு” (தே.) ; ‘‘வால் வெண் சுண்ணம்” (மணி. 4 : 18) ; ‘‘வால் வெண்டோடு - இளைய வெள்ளிய தோடெனினுமமையும்; ‘ஊர்திவால்வெள்ளேறே‘ (சிலப். 16 : 35, அடியார்.) என்றாராகலின்” 1 - 3. ‘‘கண்ணி.....ஏறே யென்புழிக் கொன்றையையும் ஏற்றையும் இடைவந்த சொற்கள் விசேடித்து வந்தன” (தொல். எச்ச. சூ. 59, ந.) 3 - 4. புறநா. 56 : 1 - 2. 5. ‘‘இயங்கலு மியங்கு மயங்கலு மயங்கும்” (சிலப். 22 : 154) ; ‘‘சுழலலுஞ் சுழலு மோடலு மோடும்........நீடலு நீடும்”, ‘‘தமபெரும் பற்று நீங்கலு நீங்கார்” (மணி. 3 : 111 - 3, 8 : 57) ; ‘‘முரிமுரிந்தவென்பதனை, ‘அணியலு மணிந்தன்று’ என்றாற்போலக் கொள்க” (சீவக. 2310, ந.) ; ‘‘கறைமிட றணியலு மணிந்தன்றென்புழிக் கறைமிடற்றை அழகு பெறுதலையுஞ் செய்ததென.........முழுதும் காரியவாசகமாயே நின்றவாறு காண்க” (தொல். வேற்றுமைமயங்கு. சூ. 29, ந.) ; வேற்றுமைக்கண் றகரம் மிகாமைக்கு இவ்வடி மேற்கோள் (நன். மயிலை. சூ. 182; நன். வி. சூ. 183; இ - வி. சூ. 102, உரை) ; ‘‘விடமும் வந் தீசன் கோல மிடற்றினினீல வண்ண, வடிவுபெற் றணிய தாகி வயங்கிற்றுப் பெரிது மென்றால், கொடியரும் பெருமை யோரைக் கூடின்வெங் கோது நீங்கி, ஒடிவறு நலம்பெற் றுய்த லுரைப்பதெ னுலகி னம்மா” (பாகவதம், 8 : கடல்கடைந்த. 24) ; ‘‘அணியலுமணிந்தன்று; ஒரு பொருட் பன்மொழி” (நன். மயிலை. சூ. 397) ; கறை மறுவெனப்படுதல்: “விண்ணினார் புகழ்தற் கொத்த விழுமியோ னெற்றி போழ்ந்த, கண்ணினான் கண்டந் தன்மேற் கறையையார் கறையன் றென்பார்” (குண்டல.) ; ‘‘பாவகத்தைப் பாவித்தலென்பது, ‘கறைமிட றணியலு மணிந்தன்று‘ என்றது போலக் கொள்க” (சிவஞானபோதம், பொதுவியல்பு, சூ. 6, மேற்.) ; கறை அழகு செய்யு மென்பதை, ‘‘கடுக்கவின்பெறு கண்டனும்” (திருவிளை. நகரப்.) என்பதனால் உணர்க. 6. நவிலல் - கூறியடிப்படல்; ‘‘நாவிடை நன்னூ னன்கன நவிற்றி” (மணி. 13 : 24) 9. (புறநா. 55 : 4 - 5) ; ‘‘பிறைநெற்றி யோடுற்ற முக்கண்ணினார்”, ‘‘பிறை தாங்கு நெற்றியர்”, ‘‘பிறைசேர் நுதலிடைக் கண்ணமர்ந் தவனே” (தே.) 7 - 9. ஆகின்று - ஆயிற்று; புறநா. 148 : 7. 10. பதினெண்கணன் : ‘‘ஒன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர்” (முருகு. 168) 9 - 10. பிறை தொழுதேத்தப்படுதல்: ‘‘தொழுதுகாண் பிறையிற்றோன்றி” (குறுந். 178) ; ‘‘ஒள்ளிழை மகளி ருயர்பிறை தொழூஉம், புல்லென் மாலை” (அகநா. 239) ; ‘‘குழவித் திங்க ளிமையவ ரேத்த,
|