அழகொடு முடித்த வருமைத்து” (சிலப். 2 : 38 - 9) ; ‘‘அப்பிறை, பதினெண் கணனு மேத்தவும் படுமே யென்றார் புறப்பாட்டினும்” (சிலப். 2 : 38 - 9, அடியார்.) ; வி. பா. குருகுலச். 6. 11 - 2. ஆசிரியப்பாவில் ஈற்றயலடி முச்சீர்த்தாய் வந்ததற்கு இவ்வடி மேற்கோள்; தொல். செய். சூ. 68, பேர். 13. அருந்தவத்தோன் : ‘‘அருந்தவ முதல்வன்” (கலித். 100 : 7) ; ‘‘நற்றவனைப் புற்றரவ நாணி னானை”, ‘‘நற்றவனை நான்மறைகளாயி னானை”, ‘‘நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே”, ‘‘நற்றவன் காண்”, ‘‘மாதொர் கூறுடை நற்றவனை” (தே.) ; ‘‘அருந்தவ னதிசயித்து” (திருவால. 61 : 6) . (1) 2 | மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் | 5 | தீமுரணிய நீரு மென்றாங் கைம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் வலியுந் தெறலு மளியு முடையோய் நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் | 10 | வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந வான வரம்பனை நீயோ பெரும அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை | 15 | ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பாஅல்புளிப்பினும் பகலிருளினும் நாஅல்வேத நெறிதிரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி | 20 | நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே. |
(பி - ம்.) 20 ‘நிலையரோ’
|