பக்கம் எண் :

31

9 - 10. ‘‘சிலைத்தா ரகல மலைக்குந ருளரெனிற், றாமறி குவர்தமக் குறுதி யாமவன், எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர், வாழக் கண்டன்று மிலமே”, ‘‘மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து” (புறநா. 61 : 14 - 7, 78 : 4) ; ‘‘வணங்குசிலை பொருதநின் மணங்கமழகல, மகளிர்க் கல்லது மலைப்பறி யலையே” (பதிற். 63 : 4 - 5) ‘‘இளையோர்க்கு மலர்ந்த மார்பினை” (சிறுபாண். 232, ந.) என்பதற்கும், ‘‘சோலைமயி லார்கடுணை வெம்முலைக டுஞ்சும், கோலவரைமார்பு” (சீவக. 283, ந.) என்பதற்கும் இவ்வடிகள் மேற்கோள்; ‘‘மள்ளர்.........மார்ப; இது தாரடுத்தது” (தொல். புறத். சூ. 31, ந.)

11. செய்திரங்காவினை: ‘‘செய்துபின் னிரங்கா வினையொடு” (அகநா. 268 : 13) ; ‘‘எற்றென் றிரங்குவ செய்யற்க” (குறள், 655) ‘‘கற்றார்முற் றோன்றா கழிவிரக்கம்” (நான்மணிக். 10) . ‘‘செய்திரங்கா வினையென இரங்கல் இசையேயன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பும் உணர்த்திற்று” (தொல். உரி. சூ. 63, சே.) ; ‘‘இரங்கல், இசையேயன்றி ஒரு பொருளது கழிவாற் பிறந்த வருத்தமாகிய குறிப்பும் உணர்த்தும்; ‘செய்திரங்கா......புகழ்’ எனவரும்” (தொல். உரி. சூ. 61, ந.) ; ‘‘செய்து.......புகழென இரங்கலென்னுமுரிச்சொல்.....ஒருபொருளது கழிவாற்பிறந்த வருத்தமாகிய குறிப்புப் பொருளுணர்த்தலும் பொருந்தும்” (இ. வி. சூ. 286, உரை) . சேண்விளங்கும்புகழ் : “விண்பொருபுகழ் (புறநா. 11 : 6) ; ‘‘சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ” (பதிற். 88 : 36) ; ‘‘கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை” (மதுரைக். 209)

12. நெய்தலங்கானனெடியோய்: அரசன் பெயர்க் காரணம் இதுவே.

(10)

11

வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
5தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
10புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக