பக்கம் எண் :

367

இறந்தகாலமும் சிறுபான்மைகாட்டுமெனவுங் கொள்க.’ (இ. வி.சூ. 50, உரை) .கண்மாறல், ஒரு சொல்.

9-11. ‘‘பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற, அரிய வென்னா தோம்பாது வீசி” (பதிற்.44) ; ‘‘அரிய வெல்லா மெளிதி னிற்கொண், டுரிய வெல்லா மோம்பாது வீசி” (மதுரைக். 145 - 6) . ‘ஒன்னா, ராரெயிலவர்கட் டாகவு நுமதெனப் பாண்கடனிறுக்கும் வள்ளியோய்’ என்பதற்கு இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்கு அந்நகரைக் கொடுத்தது இங்கே உதாரணமாக அறியற்பாலது.

மு.‘கொள்ளார் தேஎங்குறித்த கொற்றமும்-பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான்போல் வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்தவெற்றியும்; தன்னையிகழ்ந்தோரையும், தான் இகழ்ந் தோரையும் கொள்ளாரென்ப....கழிந்தது பொழிந்தென என்னும் புறப்பாட்டினுள், ஒன்னார்....வள்ளியோய் என்பதுமது’ (தொல். புறத்திணை. சூ. 12, .)

(203)

204

ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர்
கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று
5தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீர்வேட் டோரே
ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்
10புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற்
புலவேன் வாழிய ரோரி விசும்பிற்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.

(பி - ம்.) 4 ‘லதனி னுயர்ந்தன்று’ 6 ‘ராகுவர்’ 8 ‘சேற்றொடு’ 10 ‘பழிப்பி னல்லதை’
திணையும் துறையும் அவை.

வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.

(இ - ள்.) 1இழிந்தோன்கூற்றால் ஈயெனச் சொல்லி இரத்தல் இழிந்தது;அவ்வீயென்றதனெதிர் ஈயேனென்று சொல்லி மறுத்தல்அவ்விரத


1. ‘‘ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே” (தொல். எச்ச. சூ. 49)