பக்கம் எண் :

368

தலினும் இழிந்தது; ஒருவன் 1இரப்பதன்முன்னே2அவன்குறிப்பை முகத்தானுணர்ந்து இதனைக் கொள்வாயாகவென்றுசொல்லித் 3தான் இரந்துகொடுத்தல் ஒருவற்கு உயர்ந்தது; அதனை அவன்அவ்வாறு கொடுப்ப அதனெதிர் கொள்ளேனென்று சொல்லிமறுத்தல் அக்கொடையினும் உயர்ந்தது; தெளிந்தநீர்ப்பரப்பின் ஒலிக்கும் திரையையுடைய பெரியகடல் நீரைஉண்ணாராவர், தண்ணீரை விரும்பினோர்; ஆவும்மாவுஞ்சென்று நீரை உண்ணக் கலங்கிச் சேற்றொடுகூடியசிறுமையையுடைத்தேயாயினும் உண்ணும் நீரையுடையதாழ்ந்தவிடத்துச் செல்லும் வழி பலவாகும்; தாம்புறப்பட்டுச் செல்லப்பட்ட வழியிடத்து அப்பொழுதுசெய்யும் புள் நிமித்தத்தையும் புறப்பட்ட முழுத்தத்தையும் (முகூர்த்தத்தையும்) பழித்தலல்லது தாம்பரிசில் பெறக்கருதிச் செல்லப்பட்டோரை அவர்ஈத்திலராயினும் பரிசிலர் பழியார்; அதனால் நீஎனக்கு இன்னையாயினும் வெறேன், வாழ்வாயாக,

ஓரி!ஆகாயத்தின்கண் மின்முதலிய தொகுதியையுடைய மழைபோலயாவர்க்கும் எப்பொருளையும் வரையாது வழங்கும் வண்மையையுடையோய்! நின்னை-எ - று.

ஓரி! வள்ளியோய்!பரிசிலர் புள்ளும் பொழுதும் பழித்தலல்லதுஉள்ளிச்சென்றோர்ப் பழியலர்; அதனால், யானும்நின்னைப் புலவேன்; வாழியரெனக் கூட்டுக.

மேற்கூறியஇரத்தல்முதல் நான்கிற்கும் ஈயெனவிரத்தலால் இழிபுபெற்றுக் கொள்ளேனெனும் உயர்பு யான்பெற்றிலேனென்பதூஉம்,அவ்வாறிரப்பவும் ஈயேனென்றாற்போலப் பரிசில்நீட்டித்தலால் உள்ள இழிபு பெற்றுக் கொள்ளெனக்கொடுக்கும் உயர்ச்சி நீ பெற்றிலையென்பதூஉம்கருத்தாகக் கொள்க.

இதனால்,ஈயேனென்னும் இழிபினும் கொள்ளெனக் கொடுக்கும்உயர்பினும் நினக்குத் தக்கதறிந்து செய்யென்பதுகூறினாராம்.

4‘பெருங்கட லுண்ணா ராகுபநீர்வேட்டோர்’ என்பதனாற் செல்வரேயாயினும்வள்ளியோரல்லார்பாற் செல்லேனென்பதும், ‘உண்ணீர் மருங்கினதர்பல வாகும்’ என்பதனால் நீ வள்ளியையாகலின் நின்பால்வந்தேனென்பதும் கொள்ளப்படும்.


1.இரப்பதன்முன்னே கொடுத்தல்: ‘‘இல்லது நோக்கி யிளிவரவுகூறாமுன், நல்லது வெஃகி வினைசெய்வார்” (பரி. 10 : 87 - 8) ; ‘‘இலனென்னுமெவ்வ முரையாமை யீதல், குலனுடையான் கண்ணே யுள” (குறள். 223)

2.புறநா. 3 : 25, குறிப்புரை.

3.‘‘கவர்வனர்போலக் காதலி னுய்த்தும்” (பெருங். 1. 39 : 54)

4.‘‘உவர்க்கடலன்ன செல்வரு முளரே, கிணற்றூற் றன்ன நீயுமாருளையே” (பழம்பாடல்) ; ‘‘கடல்பெரிது, மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல், உண்ணீரு மாகி விடும்” (ஒளவையார்)