(கு - ரை.) 1-2. புறநா. 154 : 8, 180 : 2 குறிப்புரையைப் பார்க்க; கலித். 2 : 15. 4. ‘அவர்,வேண்டாவென்று மறுக்கவும் தாம் வலியப் போகவிட்டென்றவாறு’ (மதுரைக். 220, ந.) 1-6. ‘ஈயெனவிரத்தலென்னும் புறப்பாட்டினுள்,தெண்ணீர்......வேட்டோரே என்றவழி, நின்செல்வம்கடல்போற் பெரிதேனும் பிறர்க்கு இனிதாய்நுகரப்படாதென வசையைச் செம்பொருளாகாமற் கூறியவாறு காண்க.’ (தொல்.செய். சூ. 126, ந.) 5-9. புறநா. 154 : 1 - 3. 10-11. புறநா. 124 : 1 - 3. 13. புறநா. 159 : 19; ‘‘கருவிமாமழை” (குறுந். 42) ; ‘‘கருவி வானம்” (சீவக. 725) (204) 205 | முற்றிய திருவின் மூவ ராயினும் பெட்பின் றீதல் யாம்வேண் டலமே விறற்சினந் தணிந்த விரைபரிப் புரவி உறுவர் செல்சார் வாகிச் செறுவர் | | 5 | தாளுளந் தபுத்த வாண்மிகு தானை வெள்வீ வேலிக் கோடைப் பொருந சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் நோன்சிலை வேட்டுவநோயிலை யாகுக | | 10 | ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக் கடல்வயிற் குழீஇய வண்ணலங் கொண்மூ நீரின்று பெயரா வாங்குத் தேரொ டொளிறுமருப் பேந்திய செம்மற் களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே. |
திணையும் துறையும் அவை. கடியநெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச்சாத்தனார் பாடியது. (இ - ள்.) நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை யாங்கள் விரும்பேம்; வென்றியான் உளதாகிய சினம் தீர்ந்த விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையையுடைய அஞ்சி வந்தடைந்த பகைவர்க்குச் செல்லும் புகலிடமாய் அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவருடைய முயற்சியையுடைய கிளர்ந்த உள்ளத்தைக் கெடுத்த வாட்போரின் மிக்கபடையினை
|