யுடைய வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலியையுடைய (புறநா. 144 : 14) கோடையென்னும் மலைக்குத் தலைவ! சிறியனவும் பெரியனவுமாகிய புழைகளைப்போக்கற விலக்கிய மானினது திரட்சியைத் தொலைத்த கடியசெலவையுடைய சினமிக்க நாயையும் வலியவில்லையுமுடையவேட்டுவ! நீ நோயின்றி இருப்பாயாக; இடியினது மிக்கஓசையையுடைய புதுப்பெயலைத் தரவேண்டிக் கால்வீழ்த்துக்கடலிடத்தே திரண்ட தலைமையையுடைய முகில் நீரின்றிமீளாதவாறுபோலத் தேருடன் விளங்கிய கோடுயர்ந்ததலைமையையுடைய களிற்றையின்றி மீளா, பரிசிலரதுசுற்றம்-எ - று. புரவியையுடைய விறற்சினந்தணிந்த உறுவரென இயையும். செல்சார்வாகித்தாளுளந்தபுத்த பொருநவென இயையும். புழைகெடவிலங்கிய நாயென இயையும். வெள்வீயென்றதுஅதனையுடைய முல்லையை. மூவராயினுமென்றஉம்மை சிறப்பும்மை. கோடைப்பொருந!வேட்டுவ! பெட்பின்றீதல் யாம் வேண்டலம்; பரிசிலர்கடும்பு களிறின்று பெயரல; நீ நோயிலையாகுகவெனக்கூட்டுக. யான் களிறின்றிப்பெயராநின்றேனென்பது கருத்தாகலின், நோயிலையாகுகவென்பது இகழ்ச்சிக்குறிப்பு. ‘புழைகெட விலங்கி’ என்பதூஉம்பாடம். (கு - ரை.) 1. மூவர் - சேர சோழபாண்டியர். 2. பெட்பு - விருப்பம். 1-2. புறநா. 159 : 22 - 5. 6. கோடை - கோடைமலை, கோடைமலை என்பது இக்காலத்தில் கோடைக்கானல் என வழங்குகின்றது. 7. புழை - நுழை வழி. 9. புறநா. 209 : 14.8-9. புறநா. 33 : 1 - 2. 11-4. கலித். 50 : 15 - 7. 13. புறநா. 15 : 9.14. புறநா. 164 : 10 (205) 206 | வாயி லோயே வாயி லோயே வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம் உள்ளியது முடிக்கு முரனுடை யுள்ளத்து வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப் | | 5 | பரிசிலர்க் கடையா வாயி லோயே கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல் அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென வறுந்தலை யுலகமு மன்றே யதனாற் | | 10 | காவினெங்கலனே சுருக்கினெங் கலப்பை |
|