பக்கம் எண் :

371

மரங்கொஃறச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்தற்றே
எத்திசைச் செலினு மத்திசைச் சோறே.

(பி - ம்.) 3 ‘முன்னியது’, ‘முரணுடை’ 11 ‘மரங்கொறச்சர்’

திணையும் துறையும் அவை.

அதியமான்நெடுமானஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.

(இ - ள்.) வாயில்காப்போய்! வாயில்காப்போய்!வண்மையுடையோரது செவியிடத்தே விளங்கிய சொற்களைவிதைத்துத் தாம் நினைந்த பரிசிலை விளைக்கும்வலியையுடைத்தாகிய நெஞ்சினையுடைய, மேம்பாட்டிற்கு வருந்தும்இப்பரிசிலான் வாழும் இல்வாழ்க்கையையுடைய பரிசிலர்க்குஅடையாத வாயில்காப்போய்! விரைந்த குதிரையையுடைய குருசிலாகியநெடுமானஞ்சி தான் தன் தரமறியான்கொல்லோ? அதுகிடக்க, என்தரம் அறியான்கொல்லோ? அறிவும் புகழுமுடையோர்இறந்தாராக வறிய இடத்தையுடைய உலகமுமன்றே; ஆகலாற்காவினேம் கலங்களை; கட்டினேம் முட்டுக்களை; மரத்தைத் துணிக்குந்தச்சன் பயந்த மழுவையுடைய கைத்தொழில் வல்லமகார்காட்டிடத்துச் சென்றால் அக்காட்டகம் பயன்படுமாறுஅவர்க்கு எத்தன்மைத்து? எமக்கும் யாதொரு திசைக்கட்போகினும் அத்திசைக்கட் சோறு அத்தன்மைத்து-எ - று.

கலம் - யாழுமாம்.

உள்ளத்தையுடையபரிசிலரெனினும் அமையும்.

மழுவென்றது வாய்ச்சியை;தறிகையுமாம்.

காட்டகமென்றாரேனும் கருதியதுஅதன்கண் மரமாகக் கொள்க.

பரிசிலர்க்குச் சிறாரும்,கல்விக்கு மழுவும், செல்லுந்திசைக்குக் காடும், சோற்றிற்குக் காட்டுள்மரமும் உவமையாகக் கொள்க.

(கு - ரை.) 1. மு. சிலப்.20 : 24.
விளியேற்கும்பொழுது ஆனீறு ஏகாரம்பெற்று வந்ததற்கும் (தொல். விளி. சூ. 12, .) ,இறுதியவ்வொற்றாய் ஈற்றயலாகாரம் ஓகாரமாய் ஏகாரம்மிக்கதற்கும் (நன்.சூ. 306, மயிலை.; நன். வி.சூ. 307) மேற்கோள்.

2.புறநா. 46 : 3, 237 : 4 - 5. 4. மு. புறநா. 47 : 6.

2-5. கலித். 68 : 3 - 5.

8-9. புறநா. 207 : 7.

10. ‘‘நேர்சீர் சுருக்கிக் காயகலப்பையிர்”, ‘‘காஅய்க் கொண்ட நும்மியம்” (மலைபடு. 13, 365)

10-13. ‘‘ஆற்றவுங்கற்றா ரறிவுடையா ரஃதுடையார், நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லையந்நாடு, வேற்றுநா டாகாதமவேயா மாயினால், ஆற்றுணாவேண்டுவ தில்” (பழ. 55)