1கேடென்பது கெடுவெனக் குறைந்து நின்றது. (கு - ரை.) 3-4 : சிறுபாண். 207 - 18. 5. ‘‘மறவர் மறவ” (பெரும்பாண். 455) 1-6. புறநா. 239 : 1 - 18. 8. புறநா. 3 : 12, 42 : 22. 7-8. ‘‘தவத்துறை மாக்கண் மிகப்பெருஞ் செல்வர், ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர், முதியோ ரென்னா னிளையோ ரென்னான், கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப” (மணி.6 : 97 - 100) 12. கெடு : ‘‘கெடுவாக வையா துலகம்” (குறள், 117) 12-3. புறநா. 264 : 1 - 4; ‘‘ஆடவர், பெயரும் பீடுமெழுதி யதர் தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்” (அகநா. 131 : 9 - 11) ; ‘‘செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட, கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே” (மலைபடு. 388 - 9) 13. உடம்பைப் புதைத்தவிடத்துக் கல்நடுதல் மரபு; அது வீரக்கல் என்று கூறப்படும். மு. காஞ்சித்திணைத்துறைகளுள், மன் அடாது வந்த மன்னைக் காஞ்சிக்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ. 24, ந. (221) 222 | அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென என்னிவ ணொழித்த வன்பி லாள
| | 5 | எண்ணா திருக்குவை யல்லை என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே. |
திணையும் துறையும் அவை. அவனை, தன்மகன் பிறந்தபின் பெயர்த்துச் சென்று பொத்தியார் எனக்கு இடந்தாவென்று சொற்றது. (இ - ள்.) தீயால் விளங்கிய ஒளியையுடைய ஆபரணத்தாற் சிறந்த வடிவினையுடையளாய் நின் நிழலினும் ஒரு பொழுதும் நீங்காத நீ விரும்பத் தக்க மனைவி பெறப்பட்ட புகழமைந்த பிள்ளையானவன் பிறந்தபின் வாவெனச்சொல்லி என்னை இவ்விடத்தினின்றும் போக்கிய என்னோடு உறவில்லாதவனே! உன்னோடு என்னிடை நட்பைக் கருதாதிருப்பையல்லை; புகழைவிரும்புவோய்! நீ எனக்குக் குறித்த இடம் யாது? சொல்லுவாயாக-எ-று. மற்று : அசை.
1.முதனிலைத் தொழிற்பெயரென்பர் பரிமேலழகர்; குறள் 117, உரை.
|