| வேதவேள்வித் தொழின்முடித் ததூஉம் | | 10 | அறிந்தோன்மன்ற வறிவுடை யாளன் இறந்தோன் றானேயளித்திவ் வுலகம் அருவி மாறி யஞ்சுவரக் கடுகிப் பெருவறங்கூர்ந்த வேனிற் காலைப் பசித்த வாயத்துப்பயனிரை தருமார்
| | 15 | பூவாட்கோவலர் பூவுட னுதிரக் கொய்துகட் டழித்த வேங்கையின் மெல்லியன்மகளிரு மிழைகளைந் தனரே. |
திணையும் துறையும் அவை. சோழன்கரிகாற்பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது. (இ - ள்.) அரியஅரண்களைப் பாதுகாவாது போரைச்செய்து அழித் ததுவும்,துணையாய்க்கூடிய இனத்துடனேயுங்கூட மதுக்குடங்களைச்சேர நுகர்ந்து தொலைத்துப் பெரிய பாண்சுற்றமாகியசுற்றத்தைப் பாதுகாத்ததுவும், அறத்தைத் தெளியவுணர்ந்தஒழுக்கம் மாட்சிமைப்பட்ட அந்தணரது அவைக்களத்தின்கண் வேள்விக்குரிய முறைமையைநன்றாக அறியும் 1சடங்கவிகள் அம்முறைமையைமுன்னின்று காட்டப் பலரானும் புகழப்பட்ட தூய இயல்பையுடைத்தாகியகற்பொழுக்கமாகிய கொள்கையையுடைய குற்றந்தீர்ந்தகுலமகளிரோடு வட்டமாகிய வடிவினையுடைத்தாகிய பலபடையாகச் செய்யப்பட்ட மதிலாற் சூழப்பட்ட வேள்விச்சாலையுட் 2 பருந்து விழுங்குவதாகச் செய்யப்பட்டவிடத்து நாட்டியயூபமாகிய நெடிய கம்பத்து வேதத்தாற் சொல்லப்பட்டவேள்வியினைச் செய்து முடித்ததுவுமாகிய இவற்றானாய பயனைநிச்சயமாக அறிந்த அறிவினையுடையோன்; அவன்றான்துஞ்சினன்; ஆதலால், இனி இவ்வுலகம் இரங்கத்தக்கது; அருவிநீர் மறுத்து உலகத்தார் அஞ்சும்பரிசு வெம்மையுற்றுப்பெரிய வற்கடம் (பஞ்சகாலம்) மிக்க வேனிற்காலத்துப்பசித்தஆயமாகிய பயன்படும் ஆனிரையை இரக்கித்தல் (ரக்ஷித்தல் -காத்தல்) செய்வாராகக் கூர்மை பொருந்திய கொடுவாளாற்கோவலரானவர்கள் பூக்களுடனே உதிரக் கொம்புகளைக்கழித்து அதன் தழைச்செறிவையழித்த வேங்கையினையொப்பமெல்லிய இயல்பினையுடைய உரிமைமகளிரும் அருங்கலவணிமுதலவாகிய அணிகளை யொழித்தார்-எ - று.
1.சடங்கவிகள்-ஷடங்கவித்துக்கள;்ஆறங்கங்களையும் அறிந்தோர;் ‘‘புத்தூர்ச் சடங்கவிமறையோன்” (பெரிய. தடுத்தாட்கொண்ட. 7) ; வேள்விக்குரியமுறையைக் காட்டுவோர்க்கு உபதிருஷ்டாக்கள் என்பதுபெயர். 2. பருந்துவடிவமாகச் செய்வதற்குக் கருடசயனம் என்று பெயர்.
|