பக்கம் எண் :

393

முறை நற்கறியுநர் முன்னுற வேள்வித்தொழின் முடித்ததூஉமென இயையும்.

எருவையென்றது பருந்தாகச் செய்யப்பட்ட வடிவினை.

அறிவுடையாளன் இறந்தான்; மகளிரும் இழை களைந்தனர்; இவனை இழந்த உலகம் அளித்தெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

‘எருவை நுவற்சி’ என்று பாடமோதுவாரும் உளர்.

‘ஆயத்துப் பயனிரை’ என்பதற்கு ஆயத்திற்குப் பயனாகிய இரையெனினும் அமையும்.

(கு - ரை.) 1.‘‘அரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய” (மலைபடு. 378) ; கலித். 146 : 48.

3. ஒக்கற்கடும்பு - இருபெயரொட்டு.4. அற - தெளிய.

7. ‘‘படையார் புரிசைப் பட்டினம்”, ‘‘படையுடை நெடுமதில்” (தேவாரம்) படை - மதிலின் உறுப்பு.

8. ‘பொய்ப்பருந்துகா லொடுபறந்துபோய், மெய்ப்பருந்துடன் விண்ணிலாடவோ” (தக்க. 507) என்பதையும்,

‘பொய்ப்பருந்தாவது யாகத்துக்குச் செய்தபருந்து’ என்னும் அதன் உரையையும் பார்க்க.‘‘சுடுமனற்கலுழ னாகச் சுருதியின் படியே கோட்டி” (வி. பா. இராசசூய : 91)

12-3. ‘‘அருவி மாமலை நிழத்தவு மற்றக், கருவி வானங் கடற்கோண் மறப்பவும், பெருவற னாகிய பண்பில் காலையும்” (பொருந. 235-7)

15. பூ - கூர்மை; ‘‘பூநின்ற வேன்மன்னன்” (இறை. சூ. 17, மேற்.) ; “பூவெழு மழுவினாற் பொருது போக்கிய” (கம்ப.அயோத்தி. மந்திரப். 77) ; ‘‘அடைவாம்வை நிசிதம் பூவள் ளயில்வசி யாறுங்கூர்மை” (சூடாமணி. 7 : 16)

(224)

225

தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
5வேந்துபீ டழித்த வேந்துவேற் றானையொ
டாற்ற லென்பதன் றோற்றங் கேளினிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
10இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்
தூக்கணங் குரீஇத் தூங்குகூ டேய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினு நோகோ யானே.